• Mar 14 2025

இளையராஜாவுக்கு எந்த உரிமையும் இல்லையா.? அதிரடி உத்தரவை பிறப்பித்த நீதிமன்றம்

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

சுமார் 1500க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்தவர் தான் இளையராஜா. இவர் தமிழ் ரசிகர்களால் இசைஞானி என கொண்டாடப்படுகின்றார். ஆனாலும் சமீப காலமாகவே தன்னுடைய பாடல்களை வேறு படங்களில் பயன்படுத்துவதை அவர் விரும்புவதில்லை. இதற்காக நீதிமன்றம் வரை சென்றுள்ளார்.

அன்னக்கிளி என்ற படத்தில் இசை அமைப்பாளராக அறிமுகமானவர்தான் இளையராஜா. இவர் கிட்டத்தட்ட 50 வருடங்களாக தனது இசை பயணத்தை தொடர்ந்து வருகின்றார். 80, 90 ஆம் ஆண்டுகளில் இருந்து இன்றைய நவீன காலம் வரையில் இவருடைய பாடல்களை கொண்டாடாமல் யாரும் இருக்க முடியாது. 

d_i_a

இறுதியாக விடுதலை 2 படத்தில் வெளியான 'வழி நிறைய காட்டுமல்லி..' என்ற பாடல் இளையராஜாவின் இசையில் வெளியானது. அதேபோல ஜமா படத்திலும் பாடல்கள் வெளியாகி வைரலாகி இருந்தது. இளையராஜா இசையமைத்த பாடல்களை வேறு திரைப்படங்களில் பயன்படுத்தும் பழக்கம் காணப்படுகிறது. ஆனால் அவரிடம் அனுமதி கேட்காமல் எதுவும் நடந்து விட்டால் கோபத்தின் உச்சிக்கே சென்று விடுவார்.


சமீபத்தில் மலையாளத்தில் வெளியான மஞ்சுமல் பாய்ஸ் மற்றும் தமிழில் வெளியான 96, மெய்யழகன் உள்ளிட்ட படங்களில் இவருடைய பாடல்கள் பயன்படுத்தப்பட்டன. இதற்காக நீதிமன்றம் வரை சென்றார். இது அவருடைய ரசிகர்களுக்கு மட்டுமின்றி திரை பிரபலங்களுக்கும் அதிர்ச்சியாகவே காணப்பட்டது.

இந்த நிலையில், அகத்தியா படத்தில் இளையராஜாவின் 'என் இனிய பொன் நிலாவே' என்ற பாடலை யுவன் சங்கர் ரீகிரியேட் செய்துள்ளார். இது தொடர்பில் சரிகமா நிறுவனம் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. ஆனால் அதற்கு வேல்ஸ் நிறுவனம் இளையராஜாவின் அனுமதியோடு தான் இந்த பாடல் பயன்படுத்தப்பட்டதாக கூறியது.


எனினும் இந்தப் பாடலின் காப்புரிமை இளையராஜாவிடம் இல்லை எங்களிடம் தான் உள்ளது என சரிகமா நிறுவனம் வாதாடியது. அதற்கான ஆதாரங்களும் சமர்ப்பிக்கப்பட்டது. 

இவ்வாறான நிலையிலே குறித்த ஆதாரங்களை பார்த்த நீதிமன்றம் 'என் இனிய பொன் நிலாவே' பாடலின் உரிமை  சரிகமா நிறுவனத்தில் இருப்பதால் அதனை இன்னொருவருக்கு இளையராஜா ஒதுக்க அனுமதிக்க முடியாது என உத்தரவிட்டுள்ளது. அகத்தியா திரைப்படம் ரிலீசுக்கு தயாராகியுள்ள நிலையில் இவ்வாறு சர்ச்சையில் சிக்கி உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement