• Mar 26 2026

" பராசக்தி " படத்தை மீண்டும் எதிர்க்க இதுதான் காரணம்.... - சந்திரசேகரனின் பதில்!

shali / 1 year ago

Advertisement

Listen News!

பராசக்தி படத்தின் டைட்டிலை சிவகார்த்திகேயனும் விஜய் ஆண்டனியும் வைத்து  அவர்கள்  இருவருக்கும் இடையில் வாக்குவாதம் நடந்த நிலையில் அது தற்போது ஒரு முடிவிற்கு வந்துள்ளது. அதேவேளை  நடிகர் திலகம் சிவாஜியின் சமூக நலப்பேரவையின் தலைவரான சந்திரசேகரன்  சிவகார்த்திகேயனின் படத்துக்கு மீண்டும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அதற்கான காரணத்தை தற்போது  நேர்கானல் ஒன்றிலும் கூறியுள்ளார்.  


அதில் அவர் கூறுகையில் , 1952ல் வெளியான பராசக்தி என்ற  படம் ஒரு அத்தியாயத்தின் தொடக்கம் எனக்கூறியதுடன் 1985 ம் ஆண்டும்  இதேபோல  பராசக்தி என்ற டைட்டிலில் படமொன்றை எடுக்க இருந்தனர் அப்பொழுதும் இப்படி தான் எதிர்ப்பு இருந்தது என்றதுடன் அந்த எதிர்ப்பால் படத்தின் டைட்டிலையே  மாற்றி  "மீண்டும் பராசக்தி " என்ற டைட்டிலை  படக்குழு  போட்டனர் என்றார்.

மேலும் சிவாஜி நடித்த ஏனைய படங்களின் டைட்டிலில் வேறு படங்கள் எடுக்கப்பட்டது. அதற்கு எல்லாம் நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை பராசக்தி படத்துக்கு மட்டும் தான் எதிர்ப்பு தெரிவிப்பதாகவும்  கூறினார். அத்துடன் முத்திரை பதித்த படங்களில் பராசக்தியும் ஒன்று. அத்தகைய படங்களின் பெயரை மீண்டும் பயன்படுத்த வேண்டாம் என்பதற்காகவே மறுப்பு தெரிவித்தேன் என்றார்.

இதேபோலவே" திருவிளையாடல் " என்ற படத்தின் பெயரை தனுஷ் வைக்க நினைத்த போது அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த படத்தின் பெயரை  "திருவிளையாடல் ஆரம்பம்" என வைக்க செய்ததாகவும்  கூறியுள்ளார்.


அத்துடன் கதைக்களத்துக்கு ஏற்ற வகையில் தலைப்பு  வைப்பது தான் சிறந்தது என்றார்.மேலும் "உங்களுக்கு வேறு தலைப்பு ஒன்றும்  இல்லையா? நீங்களா யோசித்து வேறு தலைப்பு வைக்கலாம் " என தெரிவித்ததுடன் சிவாஜி சார் குடும்பமும் அந்த டைட்டிலை சிவகார்த்திகேயன் படத்தில் வைத்ததால் சோகத்திலேயே உள்ளனர் என்றார்.




































Advertisement

Advertisement