• Mar 14 2025

Sun Pictures_ ஐ தூக்கியெறிந்த ராகவா லோரன்ஸ்.. 'காஞ்சனா 4' க்காக இவ்வளவு ரிஸ்க்கா?

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

கடந்த 2011 ஆம் ஆண்டு ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளியான காஞ்சனா திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதன் தொடர்ச்சியாக காஞ்சனா 2 மற்றும் காஞ்சனா 3 ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெளியானது. இந்த படங்கள் யாவும் காமெடி கலந்த திரில்லர் ஜானரில் காணப்படுவதால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

இதைத்தொடர்ந்து சமீபத்தில் பேட்டி ஒன்றில், காஞ்சனா 4 படத்திற்கான கதையை எழுதி வருவதாகவும் அந்தப் படத்தின் படப்பிடிப்புகள் கூடிய விரைவிலேயே ஆரம்பிக்கப்படும் என்றும் ராகவா லாரன்ஸ் தெரிவித்திருந்தார். இதனால் இந்த படத்திற்காக ரசிகர்கள் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கினார்.

d_i_a

அதன் பின்பு ராகவேந்திரா ப்ரோடுக்ஷன் தயாரிப்பில் காஞ்சனா நான்கு திரைப்படம் உருவாக உள்ளதாக அதிகாரவபூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதனை ராகவா லாரன்ஸ் இயக்கி நடிக்க உள்ளார்.


மேலும் இந்த படத்தில் ராகவா லாரன்ஸுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே  நடிக்க உள்ளதாகவும் பாலிவுட் நடிகை நோரா பதேகியும் முக்கிய கேரக்டரில் நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகின. இதற்கான அதிகாரபூர்வ தகவல்கள் கூடிய விரைவில் வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.


இந்த நிலையில், காஞ்சனா 4 படத்தை தயாரிக்க இருந்த சன் பிக்சர்ஸ் நிறுவனம் 60 கோடிக்கு மேல் பட்ஜெட் கொடுக்க முடியாது எனக் கூறியதால் கோல்டன் மை என்ற நிறுவனத்தை அணுகியுள்ளார் ராகவா லோரன்ஸ். தற்போது இந்தப் படம் சுமார் 120 கோடி பட்ஜெட்டில் உருவாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் கடந்த 23ஆம் தேதி ஆரம்பிக்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. பான் இந்திய படமாக உருவாகும் காஞ்சனா 4 படத்தை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement