• Dec 01 2022

உனக்கு மல்லிப்பூ கேட்குதா உண்மையை சொன்னால் செருப்பால் அடிப்பார்கள்- சீமானை மோசமாக கழுவி ஊற்றும் நடிகை விஜயலட்சுமி

Listen News!
stella / 1 month ago
image
Listen News!

தமிழ் சினிமாவில் பிரன்ஸ் திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகியர் தான் நடிகை விஜயலட்சுமி . தொடர்ந்து .ராமச்சந்திரா, மிலிட்டரி, எஸ் மேடம், சூரி உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்திருக்கின்றார்.இது தவிர அரசியலிலும் ஈடுபட்டு வரும் இவர்  நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் தன்னை ஏமாற்றியதாக போலீசில் புகார் அளித்தார். 

மேலும் அடிக்கடி சீமான் குறித்து விமர்சித்து வருகின்றார். அந்த வகையில் அண்மையில்  வெந்து தணிந்தது காடு படத்தில் இடம்பெற்ற மல்லிப்பூ பாடலை பாராட்டி சீமான் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார்.


அதில் ‘என்னுடைய அன்புத்தம்பி சிலம்பரசன் அவர்கள் நடித்து, தமிழ்ப்பேரினத்தின் பெருமைமிகு இசைத்தமிழன் என் ஆருயிர் இளவல் ஏ.ஆர். ரஹ்மான் அவர்கள் இசையமைத்து வெளிவந்திருக்கிற ‘வெந்து தணிந்தது அவர்கள் படத்தில், என் பாசத்திற்கும் அன்பிற்கும் உரிய அக்கா கவிஞர் தாமரை அவர்கள் எழுதி, பாடகி மதுஸ்ரீ அவர்கள் இனிமையான குரலில் பாடியிருக்கின்ற மல்லிப்பூ பாடலை அண்மை நாட்களாக எண்ணற்ற முறை என் பயணங்களிலும், என் ஓய்வு நேரங்களிலும் கேட்டுக்கொண்டே இருக்கிறேன்

அயலகத்தில் பணிபுரியும் தன் அருமை கணவனை நினைத்து அன்பு மனைவி பாடுவது போல அமைந்திருக்கும் அப்பாடல் வரிகளும், இசை கோர்ப்பும் தனித்துவமாக அமைந்திருப்பது மனதை மயக்குகிறது. கோர்ப்பும் பிரிந்து இருக்கக்கூடிய பெண்ணின் ஏக்கத்தையும், வலியையும் தன் மென் அழகு தமிழால் அப்படியே வடித்திருக்கின்ற அக்கா தாமரை அவர்களுக்கும், அவ்வரிகளுக்கு ஆகச்சிறந்த இசையால் உயிரூட்டியிருக்கும் நம் தலைமுறையின் ஈடுஇணையற்ற இசைத்தமிழன் அன்புஇளவல் ஏ.ஆர்.ரகுமான் அவர்களுக்கும் எனது பாராட்டுகளும், வாழ்த்துகளும். -விளம்பரம்- உங்கள் பணி தொடரட்டும் தொடரட்டும்! அக்கா தாமரை அவர்களுக்கு இதுபோன்ற மிகச் சிறந்த பாடல்கள் எழுதுவதற்கான வாய்ப்பைத் தொடர்ந்து வழங்கிவரும் இயக்குநர் அன்புச்சகோதரன் கௌதம் மேனன் அவர்களுக்கும், இப்படத்தைத் தயாரித்துள்ள சகோதரர் ஐசரி கணேசன்  அவர்களுக்கும் எனது பேரன்பும், வாழ்த்துகளும்..! ” என்று குறிப்பிட்டு இருந்தார். இப்படி ஒரு நிலையில் இதனை விமர்சித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் விஜயலட்சுமி.


அதில் ”உனக்கு மல்லிப்பூ கேட்குதா சீமான், நான் மட்டும் உண்மையை சொன்னால் எல்லாரும் உன்னை செருப்பால் அடிப்பார்கள். மக்கள் ஒன்றும் முட்டாள் இல்லை, என்னுடைய கேஸ் ஒன்றும் வரட்டும் அப்போ இருக்கு உனக்கு. சிம்பு சார் நீங்க  என்ன பாவம் நயன்தாராவுக்கு பண்ணினீர்களோ அதைத் தான் சீமானும் செய்து விட்டார். நீங்களும் அவரும் ஒன்று தான் என்று கூறியுள்ளார். இந்த வீடியோ வைரலாகி வருவதைக் காணலாம்.