பெங்களூரில் அண்மையில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவிற்காக பல நாடுகளின் புகழ்பெற்ற நட்சத்திரங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இந்த விழாவில் தென்னிந்திய திரைப்பட உலகின் பிரபல நடிகை ராஷ்மிகா மந்தனாவும் கலந்துகொள்ள அழைக்கப்பட்டிருந்தார். ஆனால், அவருக்கு அழைப்பு வந்தபோது, "கர்நாடக எங்க இருக்கிறது? என் வீடு எங்கு இருக்கிறது?" எனக் கூறி அதில் பங்கேற்க மறுத்துள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இந்த தகவல் தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதுடன் கர்நாடகாவைச் சேர்ந்த அரசியல் பிரமுகர்கள், திரையுலகத்தினர் மற்றும் ரசிகர்கள் பலரும் அதிருப்தி தெரிவித்துள்ளனர். குறிப்பாக, காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் ரவிக்குமார் கவுடா ராஷ்மிகாவின் கருத்தை கடுமையாக விமர்சித்துள்ளார்.
ராஷ்மிகா சிறந்த நடிகையாக பல்வேறு மொழித் திரைப்படங்களில் நடித்து பெயர் பெற்றுள்ளார். ஆனால், கர்நாடக மாநிலத்தில் நடைபெறும் முக்கிய விழாவில் பங்கேற்க மறுத்தது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இது கர்நாடகாவை இழிவுபடுத்தும் செயல் என பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
ராஷ்மிகாவின் முடிவு குறித்து சமூக வலைதளங்களில் கலவையான கருத்துகள் பரவி வருகின்றன. சிலர், இது ஒரு தனிப்பட்ட முடிவு என்றும் கருத்து தெரிவிக்கின்றனர். ஆனால், பெரும்பாலான கர்நாடக ரசிகர்கள், "நமது மாநிலத்தை மதிக்காத ஒருவரை ஏன் நாங்கள் ஆதரிக்க வேண்டும்?" எனக் கூறி அவரது திரைப்படங்களை புறக்கணிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Listen News!