• Sep 20 2024

யார் இந்த லோகேஷ் கனகராஜ்- இயக்குநராக முதல் எங்கு வேலை பார்த்தார் தெரியுமா?

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தாமும் இயக்குநர் ஆக வேண்டும் என்ற ஆசையில் எத்தனையோ ஆண்டுகள் உதவி இயக்குநராக பணி புரிபவர்கள் பலர் இருக்கின்றனர். சினிமாவை இயக்குவதென்றால் முன் அனுபம் அதிகம் தேவை என்பதற்காகவே இவ்வாறு துணை இயக்குநராக இருந்து வருகின்றனர்.

இவர்களில் சினிமாவின் மீது இருந்த பற்றாலும் பக்தியாலும் முன்னணி நடிகர்களுடன் கை கோர்த்து ஹிட் கொடுத்து வரும் மாஸ் இயக்குநராக வலம் வருபவர் தான் லோகேஷ் கனகராஜ். இவர் 1986 ஆம் ஆண்டு கோவை மாவட்த்தில் பிறந்தவர். இவருக்கு மூன்று சகோதரர்கள் இருக்கின்றனர்.

அண்ணா பல்கலைக் கழகத்தில் முதுமானி பட்டம் பெற்ற இவர் சினிமா கதைகளைக் கூறும் சிறந்த நபராக இருந்தார். அத்தோடு பட்டம் பெற்றதால் ஓர் தனியார் வங்கியில் வேலை பார்த்து வந்தார். பின்பு கடந்த 2012ம் ஆண்டு திருமணம் செய்ததோடு இவருக்கு ஆத்விகா ஆத்ரூதா என இரண்டு பிள்ளைகளும் இருக்கின்றனர்.

இவரின் முதல் குறும்படமான அச்சம் தவிர் கடந்த 2018ம் ஆண்டு வெளியாகி சிறந்த குறும்படம் சிறந்த இயக்குநர் போன்ற விருதுகளையும் பெற்றது. இதனைத் தொடர்ந்து குறும்படங்ளை இயக்கி வந்தார். 2014ம் ஆண்டு களம் என்னும் குறும்படத்தை இயக்கினார்.

இப்படத்திற்காககவும் பல விருதுகளையும் பெற்றார். அதன் பின்பு 46 நாட்களில் எடுத்து 2017ம் ஆண்டு வெளியாகிய திரைப்படம் தான் மாநாகரம். இந்தப்படம் தான் இவரது முதல்படமாகும். இந்தப் படத்தின் மூலம் முன்னணி நடிகர்களின் பார்வை இவர் மேல் திரும்பியது.

அதன் பின்பு தான் கார்த்தியை வைத்து கைதி தளபதி விஜய்யை வைத்து மாஸ்டர் போன்ற திரைப்படங்களை இயக்கியிருந்தார். இப்படங்களும் சூப்பர் டூப்பர் ஹிட் பெற்றதை அடுத்து கமல்ஹாசனை வைத்து விக்ரம் படத்தை இயக்கியுள்ளார். இந்தப்படமும் நேற்றைய தினம் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்று வருகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement