சமூக நலன், அரசியல் மற்றும் உணர்வுகளை மையமாகக் கொண்ட திரைப்படங்கள் மூலம் தனித்த அடையாளத்தை ஏற்படுத்தியுள்ள இயக்குநர் மாரி செல்வராஜ், தனது அடுத்த படத்திற்காக நடிகர் தனுஷுடன் இணையவுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

தற்போது துருவ் விக்ரம் நடிப்பில் அவர் இயக்கியுள்ள 'பைசன்' திரைப்படம் அக்டோபர் 17ம் தேதி திரையரங்குகளில் வெளியிடப்பட உள்ள நிலையில், இப்படம் இன்னும் வெளியாகாத போதே, ரசிகர்களிடையே அவரது அடுத்த திட்டம் குறித்த ஆர்வம் உச்சத்தை எட்டியுள்ளது.
‘பரியேறும் பெருமாள்’, ‘கர்ணன்’, ‘மாமன்னன்’ போன்ற படங்களை இயக்கி பெரும் வரவேற்பைப் பெற்ற மாரி செல்வராஜ், தற்போது ‘பைசன்’ படத்தின் மூலம் மீண்டும் தனது தனித்துவமான படைப்பாற்றலை நிரூபிக்கத் தயாராக உள்ளார்.

'பைசன்' திரைப்படம் சமூகம், சுற்றுச்சூழல் மற்றும் மனித உரிமை சார்ந்த ஒரு முக்கியமான கோணத்தில் மையம் கொண்டதென எதிர்பார்க்கப்படுகிறது. இப்படம் இன்னும் திரைக்கு வராமல் இருக்கின்ற போதே, அவரின் அடுத்த படம் பற்றிய அறிவிப்பு திரைத்துறையில் பெரும் எதிரொலியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் மாரி செல்வராஜ் அடுத்ததாக தனுஷுடன் கூட்டணி சேரவுள்ளார் என தகவல்கள் வெளியாகியிருந்தன. இதன் மூலம், ‘கர்ணன்’ படத்திற்கு பிறகு மீண்டும் தனுஷ் – மாரி செல்வராஜ் கூட்டணி உருவாகிறது என்பது ரசிகர்களுக்கு மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த செய்திக்கு இணையாக, இயக்குநர் மாரி செல்வராஜ், உதயநிதி ஸ்டாலின் அவர்களின் மகனான இன்பநிதிக்கான கதையை தற்போது உருவாக்கிக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார்.
மாரி கூறும்போது, “நான் முதல்ல கதை சொல்லி, ஒப்புதல் வாங்குறேன். அப்புறம் தான் ஒப்பந்தம்,” என மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார். இது, இன்பநிதியின் சினிமா பயணத்திற்கு சரியான தொடக்கமாக அமையும் எனக் கூறப்படுகிறது. அத்துடன் அப்படத்தில் இன்பநிதியுடன் சேர்ந்து கார்த்தியும் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Listen News!