• Sep 20 2024

பிபி ஜோடிகள் 2 இறுதிப்போட்டிக்கு யார் யார் வந்துள்ளார்கள் தெரியுமா..?தீயாய் பரவி வரும் புகைப்படம்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!


விஜய்டிவியில் பிரமாண்டமாக ஓடி முடிந்த நிகழ்ச்சி தான் பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியானது இதுவரைக்கும் 5 சீசன்களைக் கடந்துள்ளது.விறு விறுப்பாக ஓடும் இந்த ரியாலிட்ரி ஷோவின் அடுத்த சீசனுக்காக ரசிகர்கள் ஆவலாக காத்துக்கொண்டு இருக்கிறார்கள்.

பிக்பாஸ் போட்டியாளர்களுக்காக உருவாக்கப்பட்ட நடன நிகழ்ச்சி தான் பிக்பாஸ் ஜோடிகள். இந்த நிகழ்ச்சியின் முதல் சீசன் கடந்த வருடம் நடைபெற்றது. முதல் சீசன் முடிவடைய இப்போது இரண்டாவது சீசனும் கலக்கலான ஜோடிகளுடன் ஆரம்பிக்கப்ட்டு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

ரம்யா கிருஷ்ணன், சதிஷ் நடுவர்களாக உள்ள இந்த நிகழ்ச்சியை ராஜூ ஜெயமோகன் மற்றும் பிரியங்கா  இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகின்றனர்.

இதற்கிடையே இன்று நடைபெற்று வரும் பிபி ஜோடிகளின் இறுதி போட்டி செட்டு இயக்குநர் ராஜமௌலி, ரன்பீர் கபூர், நாகார்ஜூனா உள்ளிட்டோர் கலந்து கொண்டதாக தகவல் கசிந்துள்ளது.



அத்தோடு  அவர்கள் Brahmastra படத்தின் ப்ரோமோஷனுக்காக பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.

Advertisement

Advertisement