• Sep 20 2024

வெளிநாடு போய் படிச்சிட்டு ஸ்டோரி காப்பி அடிக்கிறியே தம்பி... லீக்கானது விஜய் மகன் சஞ்சயின் திரைப்பட ஸ்டோரி... ஹீரோ யார் தெரியுமா...

subiththira / 10 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் தளபதி விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் தற்போது இயக்குனராக அவதாரம் எடுத்திருக்கிறார். ஆனா இவர் நடிகராக தான் என்ட்ரி கொடுப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் சஞ்சய் அவர்களின் புதிய படத்திற்கான ஸ்டோரி லீக் ஆகியுள்ளது. 


சஞ்சய் இயக்குனராக வேண்டும் என்றே, திரைப்படம் குறித்த படிப்புகளை மேலை நாடுகளுக்கு சென்று படித்து திரும்பி உள்ளார். அதிலும் இவருடைய முதல் படத்தை பிரம்மாண்டமாக தயாரிக்க வேண்டும் என லைக்கா நிறுவனம் முன் வந்துள்ளது.ஜேசன் சஞ்சய் இயக்கும் இந்தப் படத்தின் ஸ்டோரி இப்போது லீக் ஆகி இணையத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. இந்த படத்தில் கதாநாயகனாக கவின் நடிக்கிறார். இந்த படத்தின் கதையில் கதாநாயகன் கவின் மற்றும் கதாநாயகியும் எதிர்பாராத விதமாய் குறுஞ்செய்தியின் மூலம் டிஜிட்டல் பிரண்ட்ஷிப் ஆகின்றனர்.


அதன் பின் இருவருக்கும் இடையே கிரஷ் ஏற்பட்டு, அது காதலாக மாறுகிறது. அதுவரை இவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளவில்லை, அதன் பிறகு தான் இருவரும் சந்திக்கின்றனர். இதுதான் ஜேசன் சஞ்சய் கவினை வைத்து எடுக்கும் படத்தின் ஒன் லைன் ஸ்டோரி. இதைக் கேட்டால் அப்படியே குணால் நடிப்பில் சூப்பர் ஹிட் ஆன காதலர் தினம் படத்தின் ரிவர்ஸ் ஸ்டோரி போன்றே இருக்குது என்று நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் கலாய்த்து தள்ளுகின்றனர். 


அதே சமயம் லைக்கா மற்றும் ஜேசன் சஞ்சய் இருவரும் படத்தின் ஸ்டோரி லீக் ஆனதை குறித்து பதட்டத்துடன் இருக்கின்றனர். ஏனென்றால் இந்த படத்தின் பூஜையை கூட யாருக்கும் தெரியாமல் சைலன்டை போயஸ் கார்டனில் உள்ள லைக்கா நிறுவனத்தின் ஒரு அலுவலகத்தில் நடத்தியுள்ளனர்.


இந்த படத்தின் பூஜையில் விஜய் கூட கலந்து கொள்ளவில்லை. அதுவே ஏகப்பட்ட சர்ச்சையை கிளப்பிய நிலையில், இப்போது இந்த படத்தின் ஸ்டோரியும் ரிலீஸ் ஆனதால் ஜேசன் சஞ்சய்க்கு பெரும் தலைவலியாக மாறி இருக்கிறது.

Advertisement

Advertisement