• May 20 2024

நடிகர் நாஞ்சில் விஜயன் திருமணம் செய்யப் போகும் பெண் யார் தெரியுமா?- திருமண தேதியும் அறிவிச்சாச்சு

stella / 9 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பான அது இது எது', 'கலக்கப்போவது யாரு' போன்ற காமெடி ஷோக்களில் கலந்து கொண்டு பிரபல்யமானவர் தான் நாஞ்சில் விஜயன். இவர் இந்த நிகழ்ச்சிகளில் பெண் கெட்டப்பில் தோன்றி ரசிகர்களை சிரிக்க வைக்கிறார் என்பதும் முக்கியமாகும்.

இவர் லாக்டவுன் நேரத்தில் யூடியூப் சேனலை தொடங்கினார். அந்த சேனலுக்கு யூடியூபர் சூர்யா தேவியை பேட்டி எடுத்த போது வனிதா விஜயகுமார்- பீட்டர் பால் திருமணம் குறித்து தகாத வார்த்தைகளால் பேசியிருந்தார்.


இந்த நிலையில் 2020 ஆம் ஆண்டு சூர்யாதேவியை அவதூறாக பேசி மிரட்டி தாக்கியதாக கூறப்பட்ட புகாரில் 2022 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு பின்னர் விடுதலையானார்.இது தவிர ஐபிஎல் கிரிக்கெட் பிளாக் டிக்கெட் விற்பனை என பல சர்ச்சைகளிலும் சிக்கியிருக்கின்றார்.


இந்த நிலையில் அண்மையில் இவருக்கு நிச்சயதார்த்தம் மிகவும் சிம்பிளாக நடைபெற்றது.  திருமண நிச்சயதார்த்தம் நடந்த புகைப்படங்கள் சிலவற்றை, சமூக வலைத்தளத்தில் இவர் பகிர, பலர் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர்.


இவரின் திருமண நிச்சயதார்த்தத்தில், நெருங்கிய குடும்பத்தினர் மற்றும் தொலைக்காட்சி நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்ட நிலையில், திருமணம் செய்துகொள்ள உள்ள பெண் யார் என்பதை மட்டும் அவர் வெளிப்படுத்தவில்லை.  தற்போது நாஞ்சில் விஜயன் திருமணம் செய்து கொள்ள உள்ள பெண் யார் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. 


அதாவது நாஞ்சில் விஜயனுக்கு அவரின் நண்பர் மூலம் அறிமுகமான பெண் ஒருவருடன், காதல் ஏற்பட்டுள்ளது. இந்த உறவு தற்போது குடும்பத்தினர் சம்மதத்துடன் திருமணம் வரை வந்துள்ளதாம்.நாஞ்சில் விஜயன் திருமணம், செப்டம்பர் மாதம் 3 ஆம் தேதி, சென்னை ECR சாலையில் உள்ள திருமண மண்டபத்தில் பிரமாண்டமாக நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. 


Advertisement

Advertisement