• May 09 2024

நடிகர் ரஜினிகாந்த் இப்படியொரு ரகசிய மீட்டிங்கிற்காகத் தான் மாலைதீவுக்கு சென்றாரா?- வெளியாகிய ரகசியத் தகவல்

stella / 9 months ago

Advertisement

Listen News!

நடிகர் ரஜினிகாந்த இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் என்னும் படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்திலிருந்து மூன்றாவது சிங்கிள் பாடல் நேற்றைய தினம் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருந்தது.இப்படம் ஆகஸ்ட் மாதம் திரைக்கு வரவுள்ளது.

இப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போதே தன்னுடைய மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் லால் சலாம் படத்தில் நடிக்க கமிட்டானதோடு இப்படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்தும் முடித்துள்ளார். கெஸ்ட் ரோல் என்றாலும் இப்படத்தில் ரஜினிகாந்திற்கு  உரிய முக்கியத்துவம் இருக்கும் என்று அவரது ரசிகர்களால் நம்பப்படுகிறது.


இதனை அடுத்து இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார். லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் இப்படமானது உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகும் என்றும் கூறப்படுகின்றது.இதற்கடுத்ததாக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கவும் உள்ளார்.

இப்படி பிஸியான டைம்லையும் அண்மையில் மாலைதீவுக்கு ரஜினிகாந்த் சென்றிருந்தார்.அங்கு கடற்கரையில் ரிலாக்ஸாக அவர் வாக் செய்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி ட்ரெண்டானது. இன்றைய தினம் ரஜினிகாந்த் சென்னைக்கு திரும்பியுள்ளார்.இந்த நிலையில் ரஜினிகாந்த் எதற்காக மாலைதீவுக்கு சென்றார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.


அதன்படி தனது மகள் ஐஸ்வர்யாவும், தனுஷும் பிரிந்திருப்பதை ரஜினியால் ஏற்றுக்கொள்ள முடியவில்லையாம். அவர்களுக்காக இல்லையென்றாலும் இரண்டு மகன்களுக்காக மீண்டும் அவர்கள் சேர வேண்டும் என நினைக்கிறாராம்.அதற்கான முயற்சியாக இருவரையும் மாலைத்தீவுக்கு அழைத்து யாருக்கும் தெரியாமல் சீக்ரெட்டாக பேசி பிரச்சினையை சுமூகமாக்கலாம் என்ற முடிவில்தான் அவர் சென்றாராம். 

ஆனால் தனுஷோ, ஐஸ்வர்யாவோ இங்கு பிஸியாக இருப்பதால் அங்கு செல்லவில்லையாம். இதனால் ரஜினிகாந்த் கொஞ்சம் அப்செட் ஆகிவிட்டார் என்று கூறப்படுகிறது. இந்தத் தகவல் தற்போது கோலிவுட்டில் தீயாக பரவிவருகிறது. அதேசமயம் இந்த தகவலில் துளிக்கூட உண்மையில்லை ரஜினி முழுக்க முழுக்க ஓய்வுக்காக மட்டும்தான் சென்றார் என்றும் ரஜினி ரசிகர்கள் கூறி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement