• Sep 19 2024

பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் தமிழ் டீசரை வெளியிடவுள்ள நடிகர் யார் தெரியுமா?- அட இது நம்ப லிஸ்ட்லிலையே இல்லையே

stella / 2 years ago

Advertisement

Listen News!

அமரர் கல்கியின் வரலாற்று சிறப்பு மிக்க நாவலான பொன்னியின் செல்வன் நாவலை அடிப்படையாகக் கொண்டு அதே பெயரில் உருவாகி உள்ள திரைப்படம் தான் பொன்னியின் செல்வன். இந்தத் திரைப்படத்தை பிரமாண்ட பொருட் செலவில் இயக்குநர் மணிரத்னம் இயக்கியுள்ளார்.

இப்படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, சரத்குமார், விக்ரம் பிரபு, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் பச்சன், ஐஸ்வர்யா லக்ஷ்மி, ஷோபிதா, பிரபு, பிரகாஷ் ராஜ், பார்த்திபன், சரத்குமார் என ஏராளமான நட்சத்திரபட்டாளமே இணைந்து நடித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட 4 ஆண்டுகளான பாண்டிச்சேரி, ஹைதராபாத், கோட்டை நகரான குவாலியரில் நடந்து முடிந்துள்ளது.

தமிழ், தெலுங்கு,கன்னடம்,மலையாளம், இந்தி என 5 மொழிகளில் செப்டம்பர் 30ந் தேதி வெளியாக உள்ளதால், படத்தின் ப்ரோமோஷன் பணிகளை படக்குழு இப்போதே தொடங்கி விட்டது. அதன்படி இன்று மாலை 6 மணிக்கு டீஸர் வெளியாகவுள்ளது.

இப்படத்தில் நடிக்கும் கதாபாத்திரத்தின் புகைப்படத்தை அடுத்தடுத்து வெளியிட்டு வருகிறது. இதில், ஆதித்த கரிகாலனாக விக்ரம், ஐஸ்வர்யா ராய் பச்சன் நந்தினி, வந்தியத் தேவனாக கார்த்தி, குந்தவையாக த்ரிஷா ஆகியோரின் போஸ்டரை வெளியிட்டுள்ளது.

இதில் பொன்னியின் செல்வன் தமிழ் டீசரை நடிகர் சூர்யா வெளியிட உள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. பொன்னியின் செல்வன் ஹிந்தி ரீசரை அமிதாப் பச்சனும், மலையாளம் ரீசரை மோகன்லாலும், தெலுங்கு டீசரை மகேஷ்பாபு, கன்னடம் டீசரை ரக்ஷித் ஷெட்டியும் வெளியிட உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement