• Apr 03 2025

கார்த்திக் சுப்புராஜின் பல கோடி செலவில் உருவாகவுள்ள வெப்சீரிஸ்..? ஹீரோ யார் தெரியுமா..?

Mathumitha / 2 months ago

Advertisement

Listen News!

"பீட்சா", "பேட்ட " போன்ற ஹிட் திரைப்படங்களை இயக்கிய இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தற்போது சூர்யாவின் 44 படமான "ரெட்ரா" படத்தை இயக்கியுள்ளார்.எதிர் வரும் மே மாதம் இப் படம் வெளியாகவுள்ளது.இந்நிலையில் இவர் அடுத்து நடிகர் மாதவனை வைத்து ஒரு புதிய முயற்சியில் இறங்கவுள்ளார்.


அதாவது இவரது "stone bench creation" மூலம் 40 கோடி பட்ஜெட்டில் ஒரு வெப்சீரியலை எடுக்கவுள்ளார்.இதில் நடிகர் மாதவன் நடிக்கவுள்ளதுடன் இதனை தெலுங்கு இயக்குநர் சாருகேஷ் சேகர் இயக்கவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.இதற்கான படப்புடிப்பு வேலைகளை பொங்கல் முடிவடைந்த கையுடன் ஆரம்பிக்கவுள்ளதாக சினிமா வட்டாரங்களில் இருந்து தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது.


குறித்த வெப்சீரியலினை வேறு சில ott நிறுவனங்களுடன் இணைந்து எடுக்கவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement