• Apr 27 2024

ரோஜாவின் பிறந்தநாள் புகைப்படங்கள்... யாரெல்லாம் போய் இருக்காங்க தெரியுமா..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாகக் கொடி கட்டிப் பறந்தவர் நடிகை ரோஜா. இவரின் நடிப்பிலும், அழகிலும் மயங்காதவர்களே இல்லை எனக் கூறலாம். அந்தளவிற்கு பல்லாயிரக்கணக்கான ரசிகர்களின் மனங்களில் குடி கொண்டிருக்கின்றார். இதனால் தான் ரசிகர்கள் இவரை 'நவரச நாயகி' என சிறப்பாக அழைத்து வருகின்றனர்.


இவர் ஆர்.கே. செல்வமணி இயக்கத்தில் உருவான 'செம்பருத்தி' படத்தின் மூலம் தான் தமிழில் அறிமுகமானார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என கலக்கிய ரோஜாவின் படங்கள் எப்போதுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறும்.


ரோஜா சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கும் போதே ஆர்.கே. செல்வமணியை காதலித்து திருமணம் செய்துகொண்டார். தற்போது இவர்களுக்கு ஒரு மகள் மற்றும் மகன் உள்ளனர்.


அதுமட்டுமல்லாது இவர் தற்போதைய ஆந்திர சுற்றுலாத்துறை மந்திரியாகவும் இருக்கின்றார். இந்நிலையில் ரோஜா நேற்றைய தினம் தன்னுடைய பிறந்தநாளை சிறப்பாகக் கொண்டாடி இருக்கின்றார். அத்தோடு தன்னுடைய பிறந்தநாளை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ரோஜா சாமி தரிசனமும் செய்திருக்கின்றார். 


இந்நிலையில் தபோது ரோஜாவின் பிறந்தநாள் புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.


Advertisement

Advertisement

Advertisement