• Apr 17 2026

பிக் பாஸ் சீசன் 7 இல் மக்களின் முதல் தெரிவு எந்த போட்டியாளருக்கு தெரியுமா? ஓர்மாக்ஸ் வெளியிட்ட வாக்கெடுப்பு

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி தற்போது இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ளது. அதிலும் சனி, ஞாயிறு கமல் தொகுத்து வழங்கும் காட்சியை  பார்ப்பதற்கென தனி ரசிகர் கூட்டமே காத்திருக்கும்.

தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பிராந்திய மொழிகளிலும் பிக்பாஸ் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.

இதில் கலந்து கொண்ட பிரபலங்களுக்கு பிரபலத்தோடு சினிமாவில் நடிப்பதற்கான வாய்ப்பும் கிடைப்பதால், சினிமாவில் நடிக்க விரும்பும் நடிகர்கள் இந்த நிகழ்ச்சியில் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர்.


பிக் பாஸ் நிகழ்ச்சியில் சினிமாவில் சாதிக்க துடிப்பவர்கள், சரியான வாய்ப்பு கிடைக்காமல் தவிப்பவர்கள் ஆகியோர் பிக்பாஸ் நிகழ்ச்சி தமக்கு நல்ல பாதையை அமைக்கும் என்ற பெரிய நம்பிக்கையோடு இதில்  கலந்துகொள்கிறார்கள்.

பிக் பாஸ் சீசன் 7 அக்டோபர் 1ம் திகதி ஆரம்பிக்கப்பட்டு தற்போது 100 நாட்களை வெற்றிகரமாக கடந்துள்ளது. இதன் இறுதியில் வெற்றியாளராக யாரை அறிவிக்க போகிறார்கள் என்பதை காண ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.


இந்த நிலையில் மும்பையை சேர்ந்த Ormax நிறுவனம் நடத்திய கணக்கெடுப்பின்படி, பிக்பாஸ் கடைசி நிகழ்ச்சியால் மக்களிடம் அதிகம் பிரபலமான போட்டியாளர் யார் என்பதை அறிவித்துள்ளார்.

அதன்படி, டிசம்பர் 30 முதல் ஜனவரி 5 வரையில் மிகவும் பிரபலமாக இருந்த போட்டியாளர்களில், அர்ச்சனா முதல் இடத்திலும், விஷ்ணு இரண்டாம் இடத்திலும் காணப்படுகின்றார்.


இவர்களை தொடர்ந்து மாயா மூன்றாம் இடத்திலும், விசித்ரா, தினேஷ் ஆகியோர் நான்காம், ஐந்தாம் இடத்திலும் காணப்பட்டுள்ளனர்.

இதேவேளை, பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து கடந்த வாரம் விசித்ரா வெளியேறி உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement