• Mar 14 2025

ரயானுடன் கைகோர்த்து வந்த சவுந்தர்யா..! எங்கு தெரியுமா..?

Mathumitha / 1 month ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் 8 நிகழ்ச்சி அண்மையில் பிரம்மாண்டமாக முடிவுக்கு வந்தது.இந்த நிகழ்ச்சியின் டைட்டில் வின்னராக  முத்து குமரன் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரின் வெற்றியை ரசிகர்கள் கொண்டாடி வந்தனர் மேலும் பலர் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.


பிக்போஸ் நிகழ்ச்சியின் பின்னர் போட்டியாளர்கள் பல இடங்களில் reunion செய்து வருகின்றனர்.ரயான் பட வெளியீடு ,goa gang trip ,பவித்ரா பிறந்தநாள் கொண்டாட்டம் என வெளியிலும் தமது நடிப்பினை வளர்த்து வருகின்றனர்.


இந்த நிலையில் தற்போது போட்டியாளர்கள் அனைவரும் பிக்பாஸ் கொண்டாட்டம் நிகழ்ச்சிக்கு தயாராகியுள்ளனர்.இதன் சூட்டிங்கினை விஜய் டிவி தொடங்கியுள்ளது.போட்டியாளர்கள் எடுத்து கொண்ட ஒரு சில புகைப்படங்கள் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது.


ஜாக்குலின் ,மஞ்சரி ,முத்துக்குமரன் ,தீபக் எடுத்து கொண்ட புகைப்படம் ஒன்றும் சவுந்தர்யா தனது இரண்டு தம்பிகளான ஜேப்பிரி மற்றும் ரயானுடன் கைகோர்த்து நிகழ்ச்சிக்கு வந்துள்ள சூட்டிங் வீடியோ ஒன்றும் இணையத்தில் கசிந்துள்ளது.

Advertisement

Advertisement