• Jul 13 2026

சினிமாவை ஓரம் கட்டிவிட்டு ஸ்ரேயா இப்போது எங்கே இருக்கிறார் தெரியுமா? வைரலாகும் போட்டோஸ்

shali / 3 weeks ago

Advertisement

Listen News!

தென்னிந்திய திரையுலகின் பிரபல நடிகைகளில் ஒருவரான ஸ்ரேயா சரண், தனது குடும்பத்துடன் செலவிட்ட அழகிய தருணங்களின் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.


தெலுங்கில் வெளியான 'இஷ்டம்' திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான ஸ்ரேயா, தமிழில் 'எனக்கு 20 உனக்கு 18' படத்தின் மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமானார். அதன் பின்னர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட பல மொழிகளில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார். தனது அழகும், திறமையான நடிப்பும் மூலம் பல ஆண்டுகளாக ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தை பெற்றுள்ளார்.

திரைப்படங்களில் பிஸியாக இருந்தாலும், குடும்ப வாழ்க்கைக்கும் முக்கியத்துவம் அளித்து வரும் ஸ்ரேயா, அவ்வப்போது தனது கணவர் மற்றும் மகளுடன் இருக்கும் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார். 

அந்த வகையில் தற்போது வெளியிட்டுள்ள புதிய புகைப்படங்களில், கணவர் மற்றும் மகளுடன் மகிழ்ச்சியாக நேரத்தை கழிக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. தற்போது ஸ்ரேயா வெளியிட்டுள்ள இந்த குடும்ப புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வேகமாக வைரலாகி வருகின்றன.

Advertisement

Advertisement