• Apr 27 2024

விஷால் நடிக்கும் 'லத்தி' எப்போது ரிலீஸ் தெரியுமா..வெளியான சூப்பர் அப்டேட்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

விஷால், சுனைனா நடிக்கும் 'லத்தி' படத்தின் ரிலீஸ் அப்டேட் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது.

தமிழில் செல்லமே படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர்  விஷால். அதன்பின்னர் நடித்த சண்டக்கோழி, திமிரு, தாமிரபரணி, இரும்புத்திரை ஆகிய வெற்றிப் படங்களில் நடித்து தனக்கான இடத்தை பிடித்தவர் தான் விஷால்.

கடைசியாக அவர் நடிப்பில் வெளியான வீரமே வாகை சூடும் திரைப்படம் பரவலான கவனத்தைப் பெற்றது. எனினும் இதையடுத்து அவர் தற்போது புதுமுக இயக்குனர் வினோத்குமார் இயக்கும் லத்தி படத்தில் நடித்து வருகிறார்.

அத்தோடு லத்தி படத்தை விஷாலின் நெருங்கிய நண்பர்களான நந்தா மற்றும் ரமணா ஆகிய இருவரும் இணைந்து ராணா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் மூலமாக தயாரித்து வருகின்றனர். இந்த படத்தை விஷாலின் விஷால் பிலிம் பேக்டரி நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது.


பாலசுப்ரமணியம் இந்த படத்தின் ஒளிப்பதிவாளராக பணியாற்றுகிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

அத்தோடு  லத்தி திரைப்படம் படம் ஐந்து மொழிகளில் PAN INDIA படமாக உருவாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படம் தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி மற்றும் தெலுங்கு ஆகிய ஐந்து மொழிகளில் முதல் லுக் போஸ்டர் சில நாட்களுக்கு முன் வெளியானது.

இவ்வாறுஇருக்கையில்  இந்த படம் வரும் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பகை சூழும் படலம் என்ற வாசகம் இந்த போஸ்டரிலும் இடம் பெற்றுள்ளது.


கடந்த 24.07.2022 அன்று இந்த படத்தின் டீஸர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement