• Aug 14 2025

விஜய் சேதுபதி- நித்யாமேனன் கூட்டணியின் “தலைவன் தலைவி”.! பாடல் வெளியீடு எப்போது தெரியுமா.?

subiththira / 2 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமா ரசிகர்கள் நீண்ட நாட்களாக காத்திருந்த “தலைவன் தலைவி” திரைப்படத்தின் பாடல் வெளியீட்டுத் திகதி தற்பொழுது அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை மாலை 6 மணிக்கு இப்படத்தின் முதல் சிங்கிள் பாடல் “பொட்டல முட்டாயி” வெளியாகவுள்ளது.

இப்படத்தில் விஜய் சேதுபதி மற்றும் நித்யா மேனன் ஜோடிக்கு புது சுவாரஸ்யத்தைக் கொடுக்கும் வகையில், பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகும் இந்தக் காதல் கதையைப் பற்றிய எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. அத்துடன் இப்பாடலை சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


இயக்குநர் பாண்டிராஜ், குடும்ப உணர்வுகளை மையமாகக் கொண்டு உருவாக்கும் திரைப்படங்களில்  பிரபலமானவர். அத்தகைய இயக்குநர் இந்த முறை காதலும், விவாதங்களும் கலந்த ஒரு படத்தை தற்பொழுது உருவாக்கியுள்ளார். 

இந்த திரைப்படத்தின் முக்கிய ஹைலைட் விஜய் சேதுபதி மற்றும் நித்யா மேனன் ஜோடி தான். இவர்கள் இருவரும் தனித்துவமான நடிகர்கள். அத்தகைய நடிகர்களின் நடிப்பில் உருவாகியுள்ள இப்படத்தினை தியட்டரில் பார்ப்பதற்காக ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.

Advertisement

Advertisement