• Sep 20 2024

தனது வருங்கால கணவரின் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை பூர்ணா-திருமணம் எப்போது தெரியுமா?

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் கடந்த 2008ம் ஆண்டு பரத் நடிப்பில் வெளியான முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் பூர்ணா. இப்படத்தில் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து கந்தகோட்டை, தகராறு, கொடிவீரன், அடங்க மறு, காப்பான் போன்ற படங்களில் நடித்திருக்கின்றார்.

தமிழைத் தவிர தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளிலும் நடித்திருக்கின்றார். இது தவிர வெப் சீரியல்களில் நடிப்பதற்கு ஆர்வம் காட்டி வரும் இவருடைய இயற்பெயர் ஷம்னா கசிம். திரைப்படங்களுக்காகத் தான் பூர்ணா என்று மாற்றி வைத்துள்ளார்.

இவர் தனது இன்ஸ்டாவில் இன்று தான் திருமணம் செய்துகொள்ள போகும் நபருடன் எடுத்த புகைப்படத்தை பதிவிட்டு திருமணத்தை உறுதி செய்துள்ளார். அவர்களது ஜோடி புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் சூப்பர், வாழ்த்துக்கள் என வாழ்த்து கூறி வருகிறார்கள்.

பூர்ணாவின் வருங்கால கணவர் ஷனித் அசிப் UAEயில் தொழிலதிபராக உள்ளார். நிச்சயம் மட்டும் இப்போது உறுதி செய்துள்ளார்கள் எப்போது திருமணம் என தெரியவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement