தமிழ் சினிமாவின் சிறப்பான நடிகரான உலகநாயகன் கமல்ஹாசன் நடிக்கும் ஒவ்வொரு படமும் ரசிகர்களிடம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்துவது வழக்கம். அந்த வகையில், தற்போது மீண்டும் 'விக்ரம்' வெற்றிக்குப் பின், அன்பறிவு மற்றும் கமல்ஹாசன் கூட்டணியில் உருவாகவுள்ள புதிய படம் குறித்த தகவல்கள் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
'விக்ரம்' படம் பாக்ஸ் ஆபிஸில் அதிகளவு வெற்றியை பெற்றுக் கொண்டது. அதன் பிறகு கமல்ஹாசன், 'இந்தியன் 2', 'KH234' போன்ற படங்களில் பிஸியாக இருக்கின்றார். இப்போது இந்த இரண்டு பெரிய பெயர்களின் கூட்டணி நிகழப்போகிறது எனும் தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளது.
தற்பொழுது வெளியான தகவலின் படி ஜூலை இறுதி அல்லது ஆகஸ்ட் முதல் வாரத்தில் ஷூட்டிங் தொடங்கப்படும் என கூறப்படுகின்றது. இதற்கான ஆரம்ப கட்டப்பணிகள் மற்றும் திரைக்கதை வேலைகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் உள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
ஜூலை – ஆகஸ்ட் மாதத்தில் ஷூட்டிங் தொடங்கும் எனத் தகவல் உறுதியாகிய நிலையில் இந்த கூட்டணியில் உருவாகும் படத்திற்கு யார் இசையமைக்கப் போகிறார்கள் என்ற கேள்வியும் ரசிகர்களிடையே எழுந்துள்ளது.
Listen News!