தமிழ்நாட்டில் மிகப்பெரிய சமையல் கலைஞராக திகழ்பவர் மாதம்பட்டி ரங்கராஜ். இவர் சமீபத்தில் ஜாய் கிரிஸில்டாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனாலும் அவர் தற்போது கர்ப்பிணியாக இருக்கும் நிலையில் ரங்கராஜ் அவரை பிரிந்துள்ளார்.
மாதம்பட்டி ரங்கராஜுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவருக்கு இரண்டாவது திருமணம் நடைபெற்றது மிகப்பெரிய விவாதத்தையும் பஞ்சாயத்தையும் ஏற்படுத்தியது.
இவர் தனது முதல் மனைவியான ஸ்ருதியை விவாகரத்து செய்யாமலேயே ஜாயை இரண்டாம் தரமாக திருமணம் செய்தார். ஆனாலும் ஜாய் கிரிஸில்டா கர்ப்பமான சில காலங்களிலேயே கொஞ்சம் கொஞ்சமாக அவரை விட்டு விலக ஆரம்பித்தார்.
இதைத்தொடர்ந்து மாதம்பட்டி ரங்கராஜ் மீது புகார் கொடுத்தார் ஜாய் கிரிஸில்டா. அவரிடமும் கிட்டத்தட்ட ஆறு மணி நேரம் விசாரணை செய்யப்பட்டது. கூடிய விரைவிலேயே மாதம்பட்டி ரங்கராஜிடமும் தங்களுடைய விசாரணையை காவல்துறையினர் முன்னெடுக்க உள்ளனர்.
இந்த நிலையில் ஸ்ருதி பற்றி ஜாய் கிரிஸில்டா அண்மையில் பேட்டி ஒன்றில் தெரிவித்த விஷயம் தற்போது வைரலாகி உள்ளது.
அதாவது, அவரின் முதல் மனைவிக்கு எல்லாமே தெரியும். அவருக்கு தெரியாமல் இந்த கல்யாணம் நடந்தது, இது திருட்டு கல்யாணம் என்று தான் எல்லோரும் நினைக்கின்றார்கள். ஆனால் அது ஸ்ருதிக்கு தெரியும்.
ஒரு நாள் ரங்கராஜ் என்னிடம் வந்து, நான் எல்லாம் அவளிடம் சொல்லிட்டேன். அவளுக்கு எந்த பிரச்சினையும் இல்ல என கூறினார். இதனால் ஸ்ருதிக்கு எல்லாம் தெரியும் என ஜாய் கிரிஸில்டா தெரிவித்தார்.
Listen News!