• Jul 12 2025

முதல் வில்லன் பட்டம் வாங்கினது நான் தான்..! – ஆனந்த் ராஜ் ஓபன்டாக்!

subiththira / 3 weeks ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமா, தனது கதைக்களத்திலும், பாத்திர வடிவமைப்புகளிலும் எப்போதும் தனித்துவம் வாய்ந்ததொரு மரபை பின்பற்றி வருகின்றது. ஒரு படத்தின் கதையை சிறப்பானதாக்குவது நாயகன், நாயகி மட்டுமல்ல; கதையின் வேகத்தை தீர்மானிக்கும் வில்லனும் அதில் முக்கிய பங்கினை வகிக்கின்றார். ஆனால் அந்த வில்லன் கதாபாத்திரங்களுக்கு மரியாதை கிடைக்கிறதா?


இந்த கேள்வியை தன்னிச்சையாக எழுப்பியிருந்தார் நடிகர் ஆனந்த் ராஜ். சமீபத்தில் அவர் அளித்த ஒரு நேர்காணலில், திரையுலகில் வில்லன்கள் தன்னிச்சையாக புறக்கணிக்கப்பட்டது குறித்து அவர் மிகுந்த உணர்வுடன் கருத்து தெரிவித்துள்ளார்.

அதன்போது, “சிறந்த ஹீரோவுக்கு விருது கொடுக்கிறீங்க. சிறந்த ஹீரோயினுக்கு கொடுக்கிறீங்க. சிறந்த குணச்சித்திர நடிகருக்கும் கொடுக்கிறீங்க. ஆனால், சிறந்த வில்லனுக்கான விருதினை யாரும் கொடுக்கமாட்டீங்களா?” என்று அம்மா ஆட்சியில் இருந்த போது கடிதம் ஒன்றினை அனுப்பியிருந்ததாக தெரிவித்திருந்தார்.


அதன் பின், 1996ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசியலில் மாற்றம் ஏற்பட்டது. ஜெயலலிதா தலைமையிலான ஆட்சி முடிந்து, கலைஞர் கருணாநிதி தலைமையிலான அரசு வந்தது. அந்த ஆண்டில், ஆனந்த் ராஜ் நடித்த “சூரிய வம்சம்” திரைப்படம் வெளியாகி, ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. 

“தமிழ்நாடு அரசின் ‘முதல் சிறந்த வில்லன் விருது’ வாங்கிய நடிகர் நான்தான். அது ஒரு பெருமை. அந்த அங்கீகாரம் கிடைத்த பிறகுதான், சினிமா உலகம் வில்லன்களையும் கவனிக்க ஆரம்பிச்சது,” என ஆனந்த் ராஜ் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.

அவருடைய அந்த உருக்கமான வரிகள், இன்றைய நடிகர்கள் மற்றும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள், “அவர் மட்டுமல்ல, அவரைப் போல பல வில்லன்கள் அங்கீகாரம் பெறாமல் விட்டுப் போனார்கள்” என கருத்து தெரிவிக்கின்றனர்.

Advertisement

Advertisement