• Dec 02 2024

சுந்தர் சி- யின் மொத்த சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? ஸ்பெஷல் நாளில் வெளியான சூப்பர் தகவல்

Aathira / 10 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குநராக வலம் வருபவர் தான் சுந்தர்.சி. பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய இவர், தலைநகரம் என்னும் திரைப்படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமாகினார்.

2006 ஆம் ஆண்டு வெளிவந்த தலைநகரம் திரைப்படத்தின் முதல் பாக வெற்றியை தொடர்ந்து கிட்டதட்ட 17 ஆண்டுகள் கழித்து அதன் 2-ஆம் பாகமும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுக் கொடுத்தது.

இன்றைய தினம் இயக்குநரும், நடிகை குஷ்புவின் கணவருமான சுந்தர் சி, தனது 56 வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு பிரபலங்கள் பலரும் வாழ்த்து சொல்லி வருகின்றார்கள்.


இந்த நிலையில், சுந்தர் சியின் சொத்து மதிப்பு பற்றிய விபரங்கள் வெளியாகியுள்ளது.

அதன்படி, அவரது ஒட்டுமொத்த சொத்து மதிப்பு 40 முதல் 50 கோடி ரூபாய்க்குள் மட்டுமே இருக்கும் என சொல்லப்படுகிறது. படங்களில் நடிப்பதற்கும் ஒன்று முதல் 2 கோடி ரூபாய் வரை மட்டுமே சம்பளம் வாங்குகிறாராம் சுந்தர் சி.

அதேபோல் சென்னையில் வீடு உட்பட சில இடங்களில் சொத்துகள் வைத்திருக்கும் அவர், கார்களில் ஆடி, BMW ஆகியவை பயன்படுத்தி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement