• Feb 05 2025

சிவகார்த்திகேயன் படத்தில் மலையாள ஹீரோ..! யார் தெரியுமா..?

Mathumitha / 3 hours ago

Advertisement

Listen News!

சுதா கெங்கார இயக்கத்தில் சிவகார்த்திகேயன்,ஸ்ரீலீலா ,அதர்வா ,ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி வரும் "பராசக்தி " திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் பிரபல மலையாள நடிகர் ஒருவர் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப் படம் 1965 களில் நடைபெற்ற உண்மை சம்பவத்தினை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வருகின்றது.


இப் படத்தின் தலைப்பு குறித்து பல சர்ச்சைகள் இருந்து வந்து அது தற்போது நிறைவுக்கு வந்துள்ளது.சமீபத்தில் வெளியாகிய இப் படத்தின் tittle teaser ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ளதுடன் சிவாஜி கணேஷனின் அறிமுக படம் என்பதனால் அனைவரும் இப் பட வருகைக்கு காத்திருக்கின்றனர்.


இந்த நிலையில் தற்போது வெளியாகி வசூலில் சூடு கிளப்பிய "மார்கோ " திரைப்படத்தின் கதாநாயகன் உன்னி முகுந்தனை இப் படத்தின் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிக்க வைப்பதற்கான பேச்சு வார்த்தைகளில் படக்குழு ஈடுபட்டு வருவதாக தெரியவந்துள்ளது.

Advertisement

Advertisement