பிரபல நடிகர்களின் படங்கள் ரிலீஸ் ஆனால் அதன் முதல் நாள் ஷோ பார்ப்பதற்கே ரசிகர்கள் அதிக ஆர்வம் காட்டுவார்கள். அதில் விசில் சத்தத்துடன் ஆட்டம் பாட்டம் என்று தியேட்டரே திருவிழா கோலம் காணப்படும். சமீப காலமாகவே தமிழ்நாட்டில் அதிகாலை 4 மணி காட்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு பிரம்மாண்டமாக அஜித்தின் விடாமுயற்சி திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படம் பிப்ரவரி ஆறாம் திகதி திரையரங்குகளில் வெளியாகும். இந்த படத்தை மகிழ் திருமேனி இயக்க லைக்கா நிறுவனம் தயாரித்துள்ளது. இதில் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடிக்கின்றார்.
பிரேக்டவுன் என்ற ஹாலிவுட் படத்தை தழுவி தான் விடாமுயற்சி படம் தமிழில் எடுக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த படம் ரிலீஸ் ஆவதற்கு ஒரு நாள் காணப்படுவதால் ரசிகர்கள் ஆவலோடு டிக்கெட்க்களை புக் செய்து வருகின்றார்கள். விடாமுயற்சி திரைப்படம் டிக்கெட் புக்கிங்கிலேயே சாதனை படைத்து வருகின்றது.
இந்த நிலையில், கடந்த மூன்று நாட்களில் மட்டும் புக் மை ஷோவில் 3,24,000 டிக்கெட்க்கள் புக் ஆகி இருப்பதாகவும் இன்னும் ஒரு நாள் இருப்பதினால் கோட் படத்தின் சாதனையை விடாமுயற்சி திரைப்படம் எளிதாக முறையடித்து விடும் எனவும் கூறப்படுகிறது.
இதே வேளை விடாமுயற்சி திரைப்படம் முதல் நாளிலேயே 40 கோடி ரூபாய் வசூலிக்கும் என நம்பப்படுகிறது. இந்த திரைப்படம் அஜித் ரசிகர்களுக்கு இரண்டு வருடம் கழித்து ரிலீஸ் ஆவதால் பெரும் கொண்டாட்டமாக இருக்கும் என நம்பப்படுகிறது.
Listen News!