• Feb 05 2025

தமிழ் சினிமாவின் பழம் பெரும் நடிகை மறைவு..! சோகத்தில் திரையுலகம்..

Mathumitha / 4 hours ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக அறிமுகமான புஷ்பலதா இன்று காலமானார். 87 வயதான இவர் 1961ஆம் ஆண்டு வெளியான 'செங்கோட்டை சிங்கம்' என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். 


தமிழில் மட்டும் அல்லாமல் தெலுங்கு, மலையாளம், இந்தி என பல மொழிகளில் 100 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த புஷ்பலதா, கதாநாயகியாகவும், துணை கதாபாத்திரங்களிலும் சிறந்து விளங்கினார். எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன் போன்ற சினிமாவின் மாபெரும் நட்சத்திரங்களுடன் பணியாற்றிய இவரின் புகழ்பெற்ற படங்களாக 'சாரதா', 'பார் மகளே பார்' உள்ளிட்ட திரைப்படங்கள் மிகவும் பிரபலமானவை. 


இவர் முன்னணி தயாரிப்பாளரான ஏ.வி.எம். ராஜனின் மனைவியாவர் என்பது குறிப்பிடத்தக்கது. கடைசியாக 1999 ஆம் ஆண்டு 'பூ வாசம்' என்ற திரைப்படத்தில் நடித்த புஷ்பலதா அதன் பின்னர் திரைப்படங்களில் காட்சியளிக்கவில்லை.


சமீபத்தில் வயது மூப்பின் காரணமாக சிகிச்சை பெற்று வந்த இவர் சிகிச்சை பலனின்றி இன்று மாலை உயிரிழந்தார். இவரது மறைவிற்கு தமிழ் சினிமாவின் பல பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement