• Sep 20 2024

தமிழ் சினிமாவில் சிவகார்த்திகேயன் எத்தனையாவது இடத்தில் உள்ளார் தெரியுமா..? எஸ்.ஜே. சூர்யா பகிர்ந்த தகவல்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் ஹிட் படங்களைக் கொடுத்து வரும் முன்னணி நடிகராக விளங்குபவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் சமீபகாலமாக வெளியாகம் திரைப்படங்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் வெற்றி பெற்று வருவதால் ரசிகர்களின் நம்பிக்கை நட்சத்திரமாகவும் வலம் வருகின்றார்.

இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் டான். இப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வெற்றிபெற்றது.

மேலும் பாக்ஸ் ஆபிசில் மட்டுமே சுமார் ரூ. 100 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இதற்குமுன் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த டாக்டர் படமும் வசூலில் ரூ. 100 கோடி வசூல் செய்திருந்தது.

இதனை தொடர்ந்து வசூலில் மாஸ் காட்டி வரும் நடிகர் சிவகார்த்திகேயன் குறித்து முன்னணி நடிகர்களில் ஒருவரான எஸ்.ஜே. சூர்யா சமீபத்திய பேட்டியில் தனது கருத்தை கூறியுள்ளார்.


மேலும் இதில் " சில படங்களிலுக்கு முன் தமிழ் சினிமாவில் நான்காவது, ஐந்தவது இடத்தில் இருந்த சிவகார்த்திகேயன், டான் படத்திற்கு பிறகு டாப் 3க்கு வந்துவிட்டார் என்று தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement