• May 08 2026

இந்திய சினிமாவின் டாப் 3 இடத்தை நோக்கி 'துரந்தர் 2'.. இதுவரையான வசூல் எத்தனை கோடி தெரியுமா

shali / 4 weeks ago

Advertisement

Listen News!

பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகரான ரன்வீர் சிங் நடிப்பில் வெளியாகியுள்ள ‘துரந்தர் 2’ திரைப்படம் உலகளவில் வசூல் சாதனைகளை நோக்கி வேகமாக முன்னேறி வருகிறது. முதல் பாகம் ரூ.1000 கோடி கிளப்பில் இணைந்து பெரும் வெற்றியை பெற்ற நிலையில், அதன் தொடர்ச்சியாக வந்த இரண்டாம் பாகமும் அதே வேகத்தில் வசூலை குவித்து வருகிறது.


தற்போதைய தகவலின்படி, ‘துரந்தர் 2’ படம் வெளியாகி 22 நாட்களில் உலகளவில் ரூ.1680 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இது மிகப்பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், புஷ்பா 2 ரூ.1742 கோடி வசூலுடன் மூன்றாம் இடத்திலும், பாகுபலி 2 ரூ.1810 கோடி வசூலுடன் இரண்டாம் இடத்திலும், தங்கல் ரூ.2070 கோடி வசூலுடன் முதல் இடத்திலும் உள்ளன.

இந்த நிலையில், ‘துரந்தர் 2’ திரைப்படம் விரைவில் ‘புஷ்பா 2’ வசூலை முந்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. படம் தொடர்ந்து நல்ல வரவேற்பைப் பெற்று வருவதால், அடுத்த சில நாட்களில் மேலும் புதிய வசூல் சாதனைகளை உருவாக்கும் வாய்ப்பு அதிகமாக உள்ளது.

Advertisement

Advertisement