பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகரான ரன்வீர் சிங் நடிப்பில் உருவான ‘துரந்தர் 2’ திரைப்படம் கடந்த மாதம் 19ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி கவனம் பெற்றது. பிரமாண்டமான பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட இந்த படம், பல இடங்களில் நல்ல வரவேற்பைப் பெற்றதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், தமிழகத்தில் இந்த படத்தை திரையிட தடை விதிக்க வேண்டும் என மதுரையைச் சேர்ந்த டி.ராகேஷ் என்பவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். தேர்தல் காலத்தில் இப்படம் வெளியாவதால், அது தேர்தல் நடத்தை விதிகளை பாதிக்கக்கூடும் என அவர் மனுவில் குறிப்பிட்டிருந்தார். மேலும், தேர்தல் முடிந்த பிறகு இப்படத்தை வெளியிட அனுமதி வழங்கலாம் என்றும் கோரிக்கை வைத்திருந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ. தர்மதாதிகாரி மற்றும் நீதிபதி அருள் முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை ஆய்வு செய்த நீதிபதிகள், மனுதாரர் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார் என்றும், திரைப்படத்தின் எந்த பகுதி விதிமுறைகளை மீறுகிறது என்பதை தெளிவாக கூறவில்லை என்றும் தெரிவித்தனர்.
மேலும், மத்திய திரைப்படச் சான்றிதழ் வாரியம் வழங்கிய சான்றிதழை எதிர்க்காத நிலையில் இந்த மனு நிலைநிறுத்த முடியாது எனக் கூறி, வழக்கை தள்ளுபடி செய்தனர்.
Listen News!