• May 21 2024

குஷி 2 திரைப்படத்தை இயக்கும் ஐடியா இருக்கா?-புதிய தகவலைத் தெரிவித்த எஸ்.ஜே. சூர்யா

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய இயக்குநர் தான் எஸ்.ஜே. சூர்யா. இவர் தற்பொழுது கதாப்பாத்திரங்களுக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படங்களிலும் வில்லன் கதாப்பாத்திரத்திலும் பல திரைப்படங்களில் நடித்து வருகின்றார்.

இவருடைய இயக்கத்தில் கடந்த 2000ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் குஷி. இப்படத்தில் கதாநாயகனாக தளபதி விஜய் நடித்திருந்தார். இவருடன் நடிகை ஜோதிகாவும் நடித்திருந்தார்.

இவர்களுடன் விவேக், மும்தாஜ், விஜயகுமார் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.காதல் கதைக்களத்தில் உருவாகி வெளிவந்த இப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பை பெற்று வெற்றிபெற்றது.

இந்நிலையில், நடிகரும், இயக்குநருமான எஸ்.ஜே. சூர்யாவிடம் ' வாலி 2 வா? இல்ல குஷி 2 வா? என்று சமீபத்தில் கேள்வி கேட்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலளித்த அவர் ' குஷி 2 இருக்கு. வாலி 2 ஐடியா இருக்கு ஆனா இன்னும் எழுதல ' என்று கூறியுள்ளார்.

Advertisement

Advertisement