• Sep 20 2024

இதயத்தை திருடாதே சீரியலில் இருந்து விலகிய கதாநாயகி-கடும் குழப்பத்தில் ரசிகர்கள்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சின்னத்திரையில் பல சீரியல்கள் சூப்பர் ஹிட்டாக ஒளிபரப்பப்பட்டு வருகின்றன. அந்த வகையில் கலர்ஸ் தமிழ் டிவியிலும் ஏராளமான சீரியல்கள் மற்றும் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகின்றன. இதில் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் இதயத்தை திருடாதே.

இந்த சீரியலின் முதல் சீசனை தொடர்ந்து இதயத்தை திருடாதே சீரியலின் இரண்டாம் சீசன் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது.

பிடிக்காத இருவரை அரசியல் நோக்கத்திற்கா திருமணம் செய்து வைக்கின்றனர். இதனால் அவரகள் எவ்வாறு வாழ்கின்றார்கள் என்பதனை முதல் சீசனிலும் இவர்களது பெண் குழந்தையான ஐஸ்வர்யா உள்ளிட்டோரை மையமாக வைத்து இரண்டாவது சீசனிலும் ஒளிபரப்பாகின்றது.

இந்த சீரியலில் ஹீரோயினாக நடிகை ஹிமா பிந்து, சஹானா என்ற கேரக்டரிலும் நடிகர் நவீன் குமார், சிவா என்ற கேரக்டரிலும் நடித்து வருகின்றனர்.

இவர்கள் இரண்டு பேரின் நடிப்பிற்கும் தனி ரசிகர் பட்டாளமே உள்ளது என்று தான் கூற வேண்டும்.

இந்த நேரத்தில் இதயத்தை திருடாதே ரசிகர்களுக்கு ஒரு சோகமான செய்தி வந்துள்ளது. அதாவது நடிகை ஹீமா பிந்து இதயத்தை திருடாதே தொடரில் இருந்து விலகியுள்ளாராம்.

இது ரசிகர்களுக்கு கடும் சோகத்தை கொடுத்திருக்கிறது.

Advertisement

Advertisement