• Jan 19 2025

பெற்றோரை பெருமைப்படுத்திய தியா.. இப்பவே விருதுகளை அள்ளிட்டாங்களே.! முழு விபரம் இதோ

Aathira / 3 months ago

Advertisement

Listen News!

கோலிவுட் சினிமாவில் பிரபல நட்சத்திரங்களாக வலம் வருபவர்கள் தான் சூர்யா ஜோதிகா தம்பதியினர். இவர்களுக்கு ஒரு மகளும் ஒரு மகனும் உள்ளனர். ஆனால் இவர்கள் குறித்த சினிமா செய்திகள் பெரிதளவில் வெளியாவது இல்லை.

இந்த நிலையில், சூர்யா - ஜோதிகாவின் மகள் தியா தற்போது ஆவணப்படம் ஒன்றை இயக்கியுள்ளார். மேலும் இந்த ஆவணப்படம் திரைப்பட விழாவில் விருதும் வென்றுள்ளதாம். அவர் இயக்கியுள்ள லீடிங் லைட் : தி அன்டோல்ட் ஸ்டோரிஸ் ஆஃப் விமன் பிஹைண்ட் தி சீன்ஸ் என்ற ஆவணப்படம், திரிலோகா இன்டர்நேஷனல் ஃபிலிம்பேர் விருதுகளில் இரண்டு விருதுகளை வென்றுள்ளது. சிறந்த ஆவணப்படத்திற்கான விருதினையும், சிறந்த திரைக்கதை எழுத்தாளர் என்ற விருதினையும் வென்றுள்ளார்.


இது தொடர்பில் ஜோதிகா தனது இன்ஸ்டா பக்கத்தில் மகள் வென்ற பதக்கங்களுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, பொழுதுபோக்கு துறையில் பெண்கள் கேஃபர்கள் எதிர்காலம் பாகுபாடு குறித்த ஒரு மாணவியாக அர்த்தமுள்ள ஆவணப்படத்தை உருவாக்குவதற்காக உன்னை நினைத்து பெருமைப்படுகின்றேன். பெண்கள் எதிர்கொள்ளும் அடிப்படை பிரச்சினையை வெளிக்கொண்டுவததற்காக நன்றி. மேலும் இதுபோல தொடர்ந்து செயல்பட வாழ்த்துக்கள் தனது மகளை வாழ்த்தி பதிவிட்டுள்ளார்.

மேலும் தனது மகள் இயக்கிய ஆவணப்படத்தின் லிங்கையும் பகிர்ந்துள்ளார். இந்த பதிவை பார்த்த பலரும் தியாவிற்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றார்கள். தியாவின்  ஆவணப்படம் மொத்தமாக 13 நிமிடங்கள் 13 நொடிகள் இடம் பெற்றுள்ளது இது முழுக்க முழுக்க ஆங்கிலத்தில் உருவாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.




 

Advertisement

Advertisement