• Jun 22 2026

தனியார் யூடியூப் சேனலில் அட்டகாசம் பண்ணிய திவாகர்.! நடந்தது என்ன.?

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

திவாகர் சமூக வலைத்தளங்களில் “வாட்டர் மெலன் ஸ்டார்” என தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு பிரபலமானவர். ஆரம்பத்தில் ரீல்ஸ் வீடியோக்கள் மூலம் கவனம் பெற்ற அவர், பின்னர்   பிக் பாஸ்  நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வாய்ப்பு பெற்றார். அதனைத் தொடர்ந்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் தோன்றி தற்போது சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

முதலில், மாகாபா ஆனந்த் தன்னை இரும்புக் கம்பியால் தாக்கியதாக திவாகர் குற்றம்சாட்டினார். ஆனால் மாகாபா, நிகழ்ச்சியில் இருந்த போட்டியாளரின் மனைவியிடம் திவாகர் தவறாக நடந்து கொண்டதால் தான் பிரச்சனை ஏற்பட்டதாக விளக்கம் அளித்தார். இதனால் சமூக ஊடகங்களில் பலர் திவாகருக்கு எதிராக கருத்து தெரிவிக்கத் தொடங்கினர்.


இதற்கிடையில், திவாகர் தொடர்ந்து வீடியோக்கள் வெளியிட்டு மாகாபா பயந்துவிட்டார் என்றும், புகழ் தன்னிடம் பொறாமை கொள்கிறார் என்றும் கூறினார்.

இந்த நிலையில், தனியார் YouTube சேனல் ஒன்றுக்கு திவாகர் பேட்டி அளிக்கும் போது, வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அதில் திவாகர் கேமராவை சேதப்படுத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

மேலும் அவர் தனது கைத்தொலைபேசியில் வீடியோ எடுத்து, அதில் “என்னை அடிக்கிறார்கள் மக்களே .” என்று கூச்சலிட்டு, போலீசில் புகார் அளிப்பேன் என்றும் தெரிவித்துள்ளார். இந்த சம்பவத்தின் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Advertisement