• May 08 2026

கல்யாணத்துக்கு முன்பே வாந்தி.? மனோஜின் அவுட்ங்கில் நடந்த ட்விஸ்ட்.! மீனா கொடுத்த வார்னிங்

Aathira / 3 weeks ago

Advertisement

Listen News!

சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட்டில், மீனா தேர்தலில் வெற்றி பெற்றதை ரேகா கேக் வெட்டி கொண்டாடுகிறார். இதனை சிந்தாமணி அவதானித்து, தன்னுடைய தொலைபேசியில் புகைப்படம் எடுக்கிறார்.

அந்த நேரத்தில் ரேகா தன்னுடைய காதலை முத்து, மீனாவிடம் சொல்லுகிறார். மேலும், “என்னுடைய குடும்பத்தில் அப்பாவை சமாளிக்கலாம், ஆனால் அம்மாவை சமாளிக்க முடியாது” என்று கூற, மீனா “நான் வந்து பேசுகிறேன்” என்கிறார். ஆனால் சிந்தாமணி தான் தன்னுடைய அம்மா என்பதை ரேகா கூறியதும், இதைக் கேட்டு அவர்கள் அதிர்ச்சி அடைகின்றனர்.

இதனால், “உங்களுடைய காதலை மறந்து விடுங்கள்” என மீனா எச்சரிக்கிறார். வீட்டில் பார்க்கும் மாப்பிள்ளையை திருமணம் செய்து கொள்ளுமாறு ரேகாவிடம் கூறுகிறார். சத்யாவுக்கு ஏதாவது ஆகிவிடுமோ என்று பயப்படுகிறார். ஆனால் ரேகா, “என்ன நடந்தாலும் நான் சத்யாவுடன் தான் வாழ்வேன்” என்று உறுதியாக இருக்கிறார்.

இதனால் முத்து, “என்ன நடந்தாலும் பார்த்துக்கலாம், நீங்கள் உங்கள் காதலில் உறுதியாக இருங்கள். முதலில் வீட்டில் பேசி பார்க்கலாம்; முடியாவிட்டால் வேறு முடிவு எடுப்போம்” என்று கூறுகிறார்.


அதற்கு பின் மனோஜ், ஹரினி இருவரும் ஆட்டோவில் செல்கிறார்கள். ஆனால் அது ஹரினிக்கு ஒத்துவராமல், வழியிலேயே வாந்தி எடுக்கிறார். இதனால் மனோஜ் குளிர்பானம் வாங்கச் செல்ல, அங்கு ரோகினி வந்து அவரிடம் பேசுகிறார். 

மேலும், ஹரினிக்கு டாபி கொடுத்து, “நான் பியூட்டிஷியன். நீங்கள் வெளியூரா? உங்களுக்கு ஸ்கின் அலர்ஜி வந்தால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்” என்று அவருடைய தொலைபேசி எண்ணையும் வழங்குகிறார்.

பின்பு மனோஜ் வருவதை அவதானித்து அங்கிருந்து கிளம்புகின்றார். ஆனாலும்,  டிவோர்ஸ் கிடைக்கும் முன்பே மனோஜ் இப்படி நடந்து கொள்வது ரோகிணிக்கு மேலும் கோபத்தை ஏற்படுத்துகிறது.

இறுதியாக, சிந்தாமணி தன்னுடைய கணவரிடம் “நம்ம மகள் என்ன செய்கிறாள் தெரியுமா?” என்று கூறி, சத்யாவை காதலிக்கும் விஷயத்தை சொல்கிறார். இதைக் கேட்டு அவர் அதிர்ச்சி அடைகிறார். மேலும், சத்யா விஜயாவின் செயினை திருடியவர், அவரால்தான் அவரோட அப்பா இறந்தார் என்று தவறாக குற்றம் சாட்டுகிறார். இதுதான் இன்றைய எபிசோட் 

Advertisement

Advertisement