மலையாள சினிமாவில் திரில்லர் படங்களுக்கு புதிய கட்டத்தை ஏற்படுத்திய படம் 'திரிஷ்யம்'. ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற இந்தக் கதையை, ஹிந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் ரீமேக் செய்தனர். அதில் தமிழ் ரீமேக்கில் 'பாபநாசம்' என்ற பெயர் வைக்கப்பட்டது.
இப்போது அந்த 'பாபநாசம்' படத்தைப் பற்றிய ஒரு முக்கிய தகவலை இயக்குநர் ஜீத்து ஜோசப் தனது சமீபத்திய நேர்காணலில் பகிர்ந்துள்ளார். இது திரைத்துறையிலும், ரசிகர்களிடையும் வெறித்தனமாக வைரலாகி வருகின்றது.
அதன்போது ஜீத்து ஜோசப், "பாபநாசம் படத்திற்கு ரஜினிகாந்த் தான் முதல் தேர்வாக இருந்தார், ஆனால் படத்தில் பொலீஸ் தாக்குவது போன்ற காட்சிகள் அவரது ரசிகர்களுக்குப் பிடிக்காது என நினைத்தேன், இதற்கிடையே கமல் இப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார், இதை அறிந்த ரஜினிகாந்த், "சூப்பர்! வாழ்த்துகள்!" என பெரிய மனதுடன் அவருக்கே உரித்தான பாணியில் கூறி எங்களை வாழ்த்தினார்" எனத் தெரிவித்திருந்தார்.
இந்த தகவல் தற்போது வெளிவந்த பிறகு, சினிமா ரசிகர்கள் வியப்புடன் பார்க்கிறார்கள். பலர், “ரஜினி சார் நடித்திருந்தால் எப்டி இருந்திருக்கும்?” என்று கற்பனை செய்தனர். மற்றொருபக்கம், “கமல் சார்தான் அந்த கதைக்கு உண்மையான உயிர் கொடுத்தார்” என்கிறார்கள்.
Listen News!