• Aug 13 2026

விடாமுயற்சி படப்பிடிப்பு முடிந்து விட்டதா? சுரேஷ் சந்திரா வெளியிட்ட போட்டோ

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

நடிகர் அஜித் மகிழ்திருமேனி இயக்கும் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு இரண்டு வருடத்திற்கு மேலாக நடைபெற்று வருகின்றது.

லைக்கா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடிகை திரிஷா நடிக்கின்றார். பல வருடத்திற்கு பிறகு இவர்கள் மீண்டும் இந்த படத்தில் இணைந்து உள்ளார்கள்.

மேலும் இந்த படத்தில் அர்ஜுன், ரெஜினா, கெஸாண்ட்ரா, ஆரவ், சந்தீப் கிஷன் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இப்படம்  தமிழில் மட்டுமின்றி  மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது.


இந்த நிலையில், தற்போது விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிந்து விட்டது என படக் குழுவுடன் இருக்கும்  போட்டோவை பகிர்ந்து உள்ளார் சுரேஷ் சந்திரா. இந்த மகிழ்ச்சியான தகவல்களால் அஜித் ரசிகர்கள் மகிழ்ச்சியாக காணப்படுகின்றார்கள்.

இதேவேளை விடாமுயற்சி திரைப்படம் திரையரங்குகளுக்கு பின் ஓடிடியில் வெளியாகும்  டிஜிட்டல் உரிமையில் நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement