• May 20 2024

கோப்ரா படத்திற்காக விக்ரம் இத்தனை கோடி சம்பளம் பெற்றாரா? வெளியானது தகவல்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதாப்பாத்திரங்களைத் தெரிந்தெடுத்து நடிப்பதில் முக்கியமானவராக வலம் வருபவர் தான் விக்ரம். இவரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் கோப்ரா. இப்படத்தில் விக்ரம் பல கெட்டப்புக்களில் நடிப்பதால் இப்படத்திற்கான எதிர்பார்ப்பானது அதிகரித்துள்ளது.

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவான இப்படத்தில் கதாநாயகியாக கே.ஜி.எப் திரைப்பட நடிகை ஸ்ரீ நிதி கதாநாயகியாக நடித்துள்ளார்.



நாளை ஆகஸ்ட் 31ம் தேதி ரிலீஸ் ஆகும் இப்படத்தின் ட்ரைலர் சில தினங்களுக்கு முன் ரிலீஸாகி பெரிய அளவில் வரவேற்பு கிடைத்து இருக்கிறது.

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் தயாராகியுள்ள இப்படத்தில் மிர்னாளினி, ஸ்ரீநிதி ஷெட்டி, இர்பான் பதான் என பலர் நடித்துள்ளார்கள்.

மேலும் இப் பட புரொமோஷனுக்காக படக்குழு திருச்சி, மதுரை என சென்று கொண்டிருக்கிறார்கள்.படத்தில் விக்ரம் 10க்கும் மேற்பட்ட கெட்டப் போட்டுள்ளதாகவும் இதனால் அவர் இப்படத்திற்கு ரூ. 25 கோடி சம்பளம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

அதேபோல் படத்தின் பட்ஜெட் ரூ. 90 கோடி என கூறப்படுகிறது. 

Advertisement

Advertisement