மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்ட ரோபோ சங்கர் திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவர் உயிரிழக்கும் போது அவருக்கு 46 வயது தான்.
ரோபோ சங்கர் எப்பொழுதும் சிரித்துக் கொண்டே இருப்பார். அதேபோல அடுத்தவர்களையும் சிரிக்க வைத்துக் கொண்டே இருப்பார். இவர் இவ்வளவு சீக்கிரமாக போய்விட்டாரே என்று அவருக்கு நெருக்கமானவர்கள் மட்டும் இல்லாமல் அறிமுகம் இல்லாதவர்கள் கூட புலம்பிக் கொண்டுள்ளார்கள்.
ரோபோ சங்கரின் இறுதி ஊர்வலத்தில் அவருடைய மனைவி பிரியங்கா செய்த காரியம் தற்போது விவாத பொருளாக மாறி உள்ளது. ரோபோ சங்கரின் உடல் வீட்டில் இருந்து மயானத்திற்கு கொண்டு செல்லும் போது அவரை வழி அனுப்பி வைக்கும் விதமாக பிரியங்கா சாலையில் டான்ஸ் ஆடினார்.
துக்கத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் பிரியங்கா டான்ஸ் ஆடினார். இவரின் நிலைமை பார்க்க பரிதாபமாக இருக்கின்றது என்று சிலர் கண்ணீர் சிந்தினர். ஆனாலும் சிலர் புருஷன் உயிரிழந்த நிலையில் மனைவியால் எப்படி இப்படி டான்ஸ் ஆட முடியும் என விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.
இந்த நிலையில், அவங்க உங்க வீட்டுல டான்ஸ் ஆடுனாங்களா? என நடிகர் எஸ் .வி சேகர் கேள்வி எழுப்பியுள்ளார்.
அதன்படி அவர் கூறுகையில், இறுதி ஊர்வலத்தில் ரோபோ சங்கர் மனைவி டான்ஸ் ஆடுறத பார்த்து இதெல்லாம் கலாச்சாரமா என்று சில பேர் கேக்குறாங்க..
ஒருவர் இழப்பை எப்படி வெளிப்படுத்தனும் என்று சொல்றதுக்கு யாருக்கும் உரிமை கிடையாது அருகதையும் கிடையாது.. ஒருவர் துக்கத்தை எப்படி வெளிப்படுத்துறாங்க என்பது அவங்களோட விருப்பம்..
அவங்க உங்க வீட்டுல வந்து டான்ஸ் ஆடுனாங்களா தயவு செய்து அடுத்தவர் சோகத்தை விமர்சனம் பண்ணாதீங்க என்று கூறியுள்ளார்.
Listen News!