• Sep 20 2024

இயக்குநருடன் மாலை மாற்றிக்கொண்டாரா மீரா மிதுன்? புகைப்படத்தோடு வெளியான தகவல்!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் மாடல் அழகியாக அறிமுகமாகியவர் தான் மீரா மிதுன். இதன் மூலம் கிடைத்த புகழைக் கொண்டு சில திரைப்படங்களிலும் நடித்து வந்தார். இருப்பினும் விஜய், சூர்யா போன்ற நடிகர்களைப் பற்றி தவறாகப் பேசி சர்ச்சையிலும் சிக்கி வந்தார்.

தொடர்ந்து விஜய்டிவியில் ஒளிபரப்பாகிய பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொணண்டு சேரன் தன்னுடன் தவறாக நடக்க முயற்சி செய்ததாகக் கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். இதனால் பாதியிலேயே இந்த நிகழ்ச்சியிலிருந்தும் வெளியேற்றப்பட்டார்.

தனக்கு வரும் பட வாய்ப்புகளை சூர்யா, விஜய் போன்ற வாரிசு நடிகர்கள் கெடுப்பதாக வீடியோ வெளியிட்டு கதறியது மட்டும் இன்றி வாயிக்கு வந்தது எல்லாம் பேசி ரசிகர்களிடம் வாங்கி கட்டி கொண்டு பின்னர் மன்னிப்பு கேட்டார்.

இதன் பின்னர் பட்டியளித்தவர்கள் பற்றி அவதூறாக பேசியதால் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்தார். இந்த சம்பவத்திற்கு பின்னர் கொஞ்சம் அடங்கி போயுள்ள மீரா… அவ்வப்போது, ஆல்பம் சாங் எடுக்கிறேன் என்கிற பெயரில் கவர்ச்சி அட்ராசிட்டி செய்து வருகிறார்.

அத்தோடு இவர், இயக்குனர் அன்பரசன் என்பவர் இயக்கி வரும் மிகவும் வித்தியாசமான கதையம்சம் கொண்ட திரைப்படமான 'பேய காணோம்' . என்கிற படத்தில் நடித்து முடித்துள்ளார்.

ஒரு பேய்… மற்றொரு பேய காணவில்லை என்று புகார் கொடுக்கும் விதமாக இப்படம் உருவாகி உள்ளது.மேலும் கவுசிக் ஹீரோவாக நடிக்கும் இந்த படத்தில், மீரா மிதுன் தான் ஹீரோயினாக நடித்துள்ளார். அத்தோடு தருண் கோபி, கோதண்டம் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் கூட, மீரா மிதுனுக்கும், காமெடி நடிகர் கோதண்டத்திற்கும்,இடையே பிரச்சனை வந்தது. அதே போல் படப்பிடிப்பு முடியும் முன்னரே இவர் இரவோடு இரவாக சென்று விட்டார் என படக்குழுவினர் குற்றம்சாட்டி இருந்தனர்.

மேலும் இது ஒருபுறம் இருக்க, தற்போது மீரா மிதுன் 'பேய காணும்' படத்தின் இயக்குநர் அன்பரானுடன் நேற்று மாலை மாற்றிக்கொண்டதாக ஒரு தகவல் வெளியாகியுளளது. இந்த தகவலை உறுதி செய்யும் விதமாக, இவர்கள் இருவரும் ஒன்றாக எடுத்து கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது. அத்தோடு தன்னை பற்றி எந்த வதந்தி வந்தாலும் அது குறித்து விளக்கம் கொடுக்கும் மீரா மிதுன், இதுகுறித்தும் விளக்கம் கொடுப்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement