தமிழ் திரையுலகில் சமீபத்தில் ‘தக் லைஃப்’ படத்தால் பரபரப்பை கிளப்பியிருந்த தாய்மொழி பெரும் சர்ச்சையாக வெடித்தன. குறிப்பாக கமல்ஹாசன் சார்ந்த கருத்து கர்நாடகா மக்கள் மத்தியில் எதிர்வினையை உருவாக்கி, கன்னட திரையுலகிலும் அதிர்வுகளை ஏற்படுத்தியிருந்தன.
இந்த விவகாரம் குறித்து, தற்போது கன்னட சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான துருவ் சார்ஜா, சென்னை நிகழ்ச்சியில் உரையாற்றியிருந்தார். இது இணையத்தில் வைரலாகி, பல்வேறு தரப்புகளிடையே விவாதங்களை தூண்டியிருக்கிறது.
சமீபத்தில் ‘தக் லைஃப்’ படத்தின் இசை நிகழ்ச்சியில் நடிகர் கமல்ஹாசன் பேசிய வார்த்தைகள், கர்நாடகா மக்களின் தாய்மொழி உணர்வுகளை புண்படுத்தும் வகையில் இருந்ததாக சிலர் குற்றம்சாட்டினர். குறிப்பாக, அவர் தமிழ் மொழியின் மேன்மையை பேசும்போது, பிற மொழிகளைப் பற்றிய கட்டாய ஒப்பீடு ஏற்பட்டது என்று கர்நாடகா சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் குவிந்தன.
இதனையே துருவ் சார்ஜா, சென்னையில் நடைபெற்ற 'KD' டீசர் வெளியீட்டு விழாவில் நேரடியாக எதிர்த்துப் பேசியுள்ளார். அதன்போது, "நான் வெளிப்படையாக சொல்கிறேன். எல்லாரும் அவரவர் தாய் மொழியை நேசிக்கிறார்கள். அதே போல எங்கள் கன்னட மொழிக்கு ஒன்று என்றால், கண்டிப்பாக கோபம் வரும்.
கர்நாடகாவில் 'தக் லைஃப்' படத்தை தவிர மற்ற எல்லா படங்களையும் எங்கள் மக்கள் வரவேற்றிருக்கிறார்கள். எங்களுடைய கன்னட மக்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்பவர்கள். ஆனால் எங்கள் மொழி மீது ஏதேனும் அபமரியாதை வந்தால், எதிர்ப்பார்கள்." எனத் தெரிவித்திருந்தார்.
துருவ் சார்ஜாவின் இந்த உரை வெளியானதும், பல ரசிகர்கள் அதை ஆதரித்தும், சிலர் கேள்வி எழுப்பியும் வருகின்றனர். இத்தகவல்கள் தற்பொழுது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றது.
Listen News!