• Sep 20 2024

தனுஷின்’தி கிரே மேன்’ பட சண்டைக்காட்சி; ட்ரெண்டிங் வீடியோ இதோ..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

கடந்த 2002ஆம் ஆண்டு செல்வராகவன் இயக்கத்தில் வெளியான துள்ளுவதோ இளமை என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் தனுஷ். இவருடைய முதல் படத்தின் வெற்றியை தொடர்ந்து இவருக்கு படவாய்ப்புகள் அதிகமாக குவிய தொடங்கின. தொடர்ந்து காதல் கொண்டேன், திருடா திருடி, தேவதைகண்டேன் போன்ற பல படங்களில் நடித்தார். தன்னுடைய இயல்பான நடிப்பினால் பல ரசிகர்களை கவர்ந்த இவர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக கலக்கி வருகிறார்.

இவர் நடிகராக மட்டுமன்றி திரைப்பட தயாரிப்பாளர், பின்னணிப் பாடகர், பாடலாசிரியர் ,திரைக்கதையாசிரியர், இயக்குநர் என பல்துறை திறமை கொண்டவராக விளங்குகின்றார்.

மேலும் இவர் தற்போது கோலிவுட்டில் மட்டுமில்லாமல் ஹாலிவுட் வரை தனது எல்லைகளை விரிவுப் படுத்தியுள்ளார். வித்தியாசமான தேடல்களுடன் ஒவ்வொரு படத்திலும் வித்தியாசம் காட்டி வருகிறார். தற்போது தமிழில் அவரது நடிப்பில் உருவாகியுள்ள திருச்சிற்றம்பலம், நானே வருவேன், வாத்தி போன்ற படங்கள் உள்ளன.

இதில் திருச்சிற்றம்பலம் விரைவில் ரிலீசாக உள்ளது. மேலும் அவரது சகோதரர் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள நானே வருவேன் படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது.

இதனிடையே தமிழ், தெலுங்கில் வெளியாகவுள்ள வாத்தி படத்தின் சூட்டிங் மும்முரமாக நடைபெற்று வருகிறது. மேலும் இந்தப் படத்தின்மூலம் முதல்முறையாக தெலுங்கிலும் தனுஷ் அறிமுகமாகவுள்ளார்.

இந்நிலையில் அவர் நடித்துள்ள ஹாலிவுட் படம் தி க்ரே மேன் வரும் 22ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகவுள்ளது.அத்தோடு இந்தப் படத்திற்காக தற்போது ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இந்தப் படத்தில் தனுஷ் வில்லனாக நடித்துள்ளதாக கூறப்படுகிறது. சமீபத்தில் இவரது போஸ்டர் உள்ளிட்டவை வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

இந்தப் படத்தின்மூலம் ஹாலிவுட் ரசிகர்களையும் கவரும் முயற்சியில் தனுஷ் ஈடுபட்டுள்ளார். மேலும் இந்தப் படத்தை அவெஞ்சர்ஸ் படத்தை இயக்கிய ரூசோ சகோதரர்கள் இயக்கியுள்ள நிலையில், படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது என்று தான் கூற வேண்டும்.இந்திய ரசிகர்களையும் கவரும்வகையில் தனுஷ் இந்தப் படத்தில் இடம் பெற்றுள்ளார்.

இந்நிலையில் தற்போது தனுஷ் இடம்பெற்றுள்ள பைட் சீன் வெளியாகியுள்ளது. மேலும் இப் படத்தின் இயக்குநர்கள் ரூசோ சகோதரர்கள் தங்களது ட்விட்டர் பக்கத்தில் இந்த காட்சியை வெளியிட்டுள்ளனர். இந்தக் காட்சியில் ஆக்ரோஷமான தனுஷை பார்க்க முடிகிறது. இந்த காட்சிகள் தற்போது படத்திற்கான எதிர்பார்ப்பை எகிற செய்துள்ளது.

முன்னதாக அமெரிக்காவில் நடைபெற்ற படத்தின் பிரமோஷனில் பங்கேற்ற தனுஷ், இத்தகைய பிரம்மாண்டமான வாய்ப்பிற்காகவே தான் காத்திருந்ததாகவும், இந்தப் படத்தில் தான் எப்படி நடித்து முடித்தேன் என்று தெரியவில்லை என்றும் குதெரிவித்துள்ளார். இந்தப் படத்திற்காக தற்போது அவருடைய ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement