• Sep 20 2024

தனுஷின் அடுத்த மாஸ்..வெளியானது கேப்டன் மில்லர் பார்ட்ஸ் லுக்!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தனுஷ் தற்போது நானே வருவேன், திருச்சிற்றம்பலம் , வாத்தி உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகின்றார். இத்துடன் தற்போது கேப்டன் மில்லரும் சேர்ந்துள்ளது.

மேலும் இந்த படத்தை அருண் மாதேஸ்வரன் என்பவர் இயக்குகிறார். சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில் 1930கள் சார்ந்த கதைக்களமாகும். தனுஷ் கேங்ஸ்டராக நடிக்கும் இந்த படம் பான் இந்தியா படமாக உருவாகின்றது. இதில் இருந்து பர்ஸ்ட் லுக் ரிலீசாகியுள்ளது.

இந்த வீடியோவில் நாயகன் தனுஷ் முகத்தை துணியால் கட்டியபடி தனது கேங்குடன் பைக்கில் வருகிறார். மேலும் இந்த பர்ஸ்ட் லுக்கை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அத்தோடு அருண் மாதேஸ்வரன் செல்வராகவன் சமீபத்தில் நடித்த சாணி காகிதம், ராக்கி உள்ளிட்ட படங்களை இயக்கையாவர்.

பான் இந்தியா நாயகனாக மாறிவிட்ட தனுஷின் தொடரி, பட்டாஸ், மாறன் உள்ளிட்ட படங்களை தயாரித்த சத்யா ஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில் மலையாள ஆக்டர் விநாயகன் வில்லன் ரோலில் ஒப்பந்தமாகியுள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் இந்த படத்தின் மற்ற நடிகர்கள், நடிகைகள், படக்குழு குறித்து விரைவில் தகவல் வெளியாகுமென தெரிகிறது.

தனுஷ் தற்போது நடித்து முடித்துள்ள திருச்சிற்றம்பலம் படங்களின் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது என கூறப்படுகின்றது.

இதிலிருந்து சமீபத்தில் பாடல் மற்றும்கிளிப்ஸ் வெளியாகி வரவேற்பை பெற்றது. அதேபோல தனுஷின் அண்ணன் செல்வராகவன் இயக்கம் நானே வருவேன் இறுதியில் உள்ளதாக சொல்லப்படுகிறது.

மேலும் வாத்தி படத்தின் மூலம் நேரடியாக டோலிவுட்டில் கால் பதித்துள்ள தனுஷ் அதில் மாணவன், ஆசிரியர் வேடம் தரித்துள்ளதாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதோடு ஹாலிவுட்டிலும் தன கால் தடத்தை பதித்துள்ள தனுஷ் அங்கு தி கிரே மேன் படத்தில் நடித்துள்ளார். இந்த ஆண்டு இறுதியில் இந்த படம் வெளியாகுமென கூறப்பட்டுள்ளது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement