மித்ரன் ஆர் ஜவகர் இயக்கத்தில் தனுஷ் நடித்த திரைப்படம் திருச்சிற்றம்பலம். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்தில் நித்யா மேனன், பாரதிராஜா, பிரியா பவானி சங்கர், பிரகாஷ் ராஜ், ராஷி கண்ணா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்திருந்தது.
இவ்வாறுஇருக்கையில் இப்டபடத்திற்கு அனிருத் இசையமைத்திருந்ததோடு ஓம்பிரகாஷ் ஒளிப்பதிவு செய்திருந்தார்.
இப்படத்தில் நடிகர் தனுஷ் உணவு டெலிவரி செய்யும் நபராக நடித்திருந்தார். இப்படம் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் நேற்று முன் தினம் ரிலீஸ் ஆனது. தமிழகத்தில் இப்படத்தை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட்டது. சுமார் 400 திரையரங்குகளுக்கு மேல் ரிலீசான இப்படத்திற்கு முதல் நாளில் இருந்தே அமோக வரவேற்பு கிடைத்து வருகின்றது
அத்தோடு நீண்ட இடைவேளைக்கு பின்னர் திரையரங்கில் தனுஷின் திரைப்படம் வெளியானதால் அவரது ரசிகர்கள் படத்தை பெரிய அளவில் வரவேற்றுள்ளார்கள். இதனால் வசூலும் அமோகமாக இருக்கிறது.
இதுவரை படம் தமிழகத்தில் மட்டுமே ரூ. 60 கோடி வரை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.
Listen News!