• Apr 02 2025

இந்த வாரம் என்னென்ன படங்கள் தியேட்டரில் ரிலீஸ் தெரியுமா? வெளியானது முழு லிஸ்ட்

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

இந்த ஆண்டு தமிழ் சினிமாவில் பெரிய நடிகர்களின் படங்கள் எதுவும் வெளியாகாத நிலையில், பொங்கல், காதலர் தினம், குடியரசு தினம் என என்பவற்றை டார்கெட் வைத்து வெளியிடப்பட்ட அத்தனை படங்களும் தமிழில் பெரிதும் பேசப்படவில்லை.  தனுஷ் நடிப்பில் வெளியான கேப்டன் மில்லர் படமும் வசூலி தடுமாறிக் கொண்டு தான் காணப்பட்டது.

இதைத்தொடர்ந்து வெளியான மலையாள படங்கள் தமிழகத்தில் வசூலை வாரிக் குவித்தது. கடந்த வாரம் பிரித்திவிராஜ், அமலாபால் நடித்த ஆடு ஜீவிதம் திரைப்படமும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த நிலையில், இந்த வாரம் என்னென்ன திரைப்படங்கள் தியேட்டரில் வெளியாக உள்ளது என்பது தொடர்பில் தகவல் வெளியாகி  உள்ளது.

அதன்படி, விஜய் தேவரகொண்டா நடித்துள்ள 'ஃபேமிலி ஸ்டார்' படம்  ஏப்ரல் ஐந்தாம் தேதி தமிழ், தெலுங்கு என இரண்டு மொழியிலும் இந்த படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.


அதுபோல தீரஜ், ஸ்மிருதி வெங்கட், கோவை சரளா, எம்.எஸ்.பாஸ்கர் உட்பட பலர் நடித்துள்ள 'டபுள் டக்கர்' என்ற திரைப்படமும் ஏப்ரல் ஐந்தாம் தேதி வெளியாக உள்ளது.


தமிழ் சினிமாவில் நடிகராகவும் இசையமைப்பாளராகவும் காணப்படும் ஜிவி பிரகாஷ் நடிப்பில் உருவான 'கள்வன்' திரைப்படம் ஏப்ரல் நான்காம் தேதி தியேட்டரில் வெளியாக உள்ளது.


இதை அடுத்து செயற்கை நுண்ணறிவு கொண்ட கருவிக்கும்  மனிதனுக்கு இடையிலான தொடர்பை சொல்லும் சயன்ஸ்  திரைப்படமான 'இரவின் கண்கள்' படமும் ஏப்ரல் ஐந்தாம் தேதி வெளியாக உள்ளது.  இதில் பாப் சுரேஷ் கதாநாயகனாக நடிக்க, டோலி ஐஸ்வர்யா அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார்.


அத்துடன் கயல் ஆனந்தி நடித்துள்ள 'ஒயிட் ரோஸ்' படமும் ஏப்ரல் ஐந்தாம் தேதி வெளியாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement