• Sep 08 2024

தமிழ் நாட்டு சீரியல்களில் டாப் 5 -க்கு முன்னேறிய 'சிறகடிக்க ஆசை' சீரியல்! TRP ரேட்டிங்கில் எதிர்பாராத ட்விஸ்ட்

Aathira / 5 months ago

Advertisement

Listen News!

சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபல சீரியல் தான் சிறகடிக்க ஆசை. இந்த சீரியல் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாக விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருவதால் இதற்கு பெரும் ரசிகர் பட்டாளமே உண்டு.  இதனால் இந்த சீரியல் நல்ல வரவேற்பை பெற்று டிஆர்பி ரேட்டிங்கிலும் முன்னிலையில் காணப்படுகிறது.

இந்த நிலையில், TRP ரேட்டிங்கில் பத்தாம் இடத்தில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக முன்னிலைக்கு வந்த இந்த சிறகடிக்க ஆசை சீரியல், தற்போது அதிரடியாக ஐந்தாம் நிலைக்கு முன்னேறியுள்ளது.

இதன் காரணமாக சன் டிவியில் ஐந்தாம் இடத்தில் காணப்பட்ட இனியா சீரியல் 6ம் இடத்திற்கு பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளது.


அதன்படி, சன் டிவியில் ஒளிபரப்பாகும் சிங்கப்பெண்ணே சீரியல்  தொடர்ந்தும் முதலிடத்தில் இருந்து வரும் நிலையில், இரண்டாவது இடத்தில் கயல் சீரியல் காணப்படுகிறது. மூன்றாவது இடத்தை எதிர்நீச்சல் சீரியல் சீரியல் பிடித்துள்ளது. மேலும் இந்த வார  டிஆர்பி ரேட்டிங்கில் நான்காவது இடத்தை வானத்தைப்போல சீரியலும் பிடித்துள்ளது.

இவ்வாறு விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியல் இம்முறை ஐந்தாவது இடத்தை பிடிக்க, கடந்த வாரம் ஐந்தாவது இடத்திலிருந்த சன் டிவி சீரியல் இனியா தற்போது ஆறாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.


மேலும் சன் டிவியில் ஒளிபரப்பாகும் சுந்தரி சீரியல் ஐந்தாவது இடத்திலிருந்து இந்த வாரம் ஏழாவது இடத்திற்கு சென்றுள்ளது.

மேலும் சன் டிவி ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம் எட்டாவது இடத்தையும், ஆகா கல்யாணம் சீரியல் ஒன்பதாவது இடத்தையும் பிடித்துள்ளது.

இறுதியாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் இந்த முறை பத்தாவது இடத்தை பிடித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement