• Jan 19 2025

சுந்தர் சியால் என் வாழ்க்கையே போச்சு.. என்னை மொத்தமா சோலிய முடிச்சிட்டார்.. புலம்பும் நடிகை..!

Sivalingam / 9 months ago

Advertisement

Listen News!

சுந்தர் சி படத்தில் நடித்ததால் தான் தனது வாழ்க்கையை போச்சு என்றும் அவர் என்னுடைய கேரியரை மொத்தமாக சோலியை முடித்துவிட்டார் என்றும் நடிகை கிரண் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விக்ரம் நடித்த ’ஜெமினி’ என்ற திரைப்படத்தில் அறிமுகம் ஆகி முதல் படமே நடிகை கிரணுக்கு சூப்பர் ஹிட் படமாக அமைந்த நிலையில் அதன் பிறகு அவர் அஜித்துடன் ’வில்லன்’ கமல்ஹாசன் உடன் ’அன்பே சிவம்’ அர்ஜுனின் ’பரசுராம்’ சரத்குமாருடன் ’திவான்’ உள்ளிட்ட படங்களில் நடித்தார். குறிப்பாக அவர் பிரசாந்த் உடன் நடித்த ’வின்னர்’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து விஜயகாந்த் உடன் ’தென்னவன்’ விஜய்யுடன் ’திருமலை’ போன்ற வெற்றி படங்களில் நடித்துக் கொண்டிருந்த போதுதான் சுந்தர் சி இயக்கத்தில் உருவான ’ஆம்பள’ திரைப்படத்தில் நடித்ததாகவும் அந்த படம் தான் தன்னை படுகுழியில் தள்ளிவிட்டது என்றும் தெரிவித்துள்ளார்.



அதன் பிறகு சுந்தர் சி தயாரிப்பில் உருவான ’முத்தின கத்திரிக்கா’ என்ற படத்தில் தன்னுடைய கேரக்டரை அவர் கேவலப்படுத்தி விட்டதாகவும் இந்த இரண்டு படங்கள் தான் என் கேரியரை கேரியர் வீழ்ச்சிக்கு காரணம் என்றும் அவர் கூறியுள்ளார்.

சுந்தர் சியின் ‘ஆம்பள’ படத்தில் நடித்தது தான் தான் செய்த பெரிய தவறு என்றும் அந்த படத்தில் என்னை டம்மி ஆகிவிட்டார் என்றும் ஹன்சிகாவுக்கு தான் அதிக முக்கியத்துவம் கொடுத்தார் என்றும் சுந்தர் சி மீது கிரண் குற்றம் சாட்டியுள்ளார். அவர் சொன்னது போல் ‘ஆம்பள’ மற்றும் ’முத்தின கத்திரிக்காய்’ படங்களுக்கு பிறகு ஒரே ஒரு படத்தில் மட்டும் தான் கிரண் நடித்தார் என்பதும் அதன் பிறகு அவர் திரை உலகை விட்டு வெளியே செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement