• May 18 2024

அஜித்திற்கு சவால் விடுகிறாரா இயக்குநர் வெற்றிமாறன் ? BMW பைக்கில் தெறிக்கவிடும் வீடியோ !

Nithushan / 1 month ago

Advertisement

Listen News!

தனுஷ் நடிப்பில் வெளியான "பொல்லாதவன்" திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகியவர் வெற்றிமாறன் ஆவார். தொடர்ந்து இவர் இயக்கிய "ஆடுகளம்" திரைப்படம் 5 தேசியவிருதுகளை பெற்று சாதனை படைத்திருந்தது. இவர் இயக்கிய விசாரணை , அசுரன் போன்ற திரைப்படங்கள் இன்றளவிலும் பேசப்படும் வரலாற்று திரைப்படங்களாக காணபடுகின்றது.



சமீபத்தில் இதுவரை காமெடியனாக பார்க்கப்பட்ட சூரியை கதாநாயகனாக வைத்து இவர் இயக்கிய திரைப்படமே விடுதலை ஆகும். இதன் இரண்டாம் பாகமும் தயாராகி வெளியாக உள்ளது. மற்றும் விஜய் சினிமாவை விட்டு விலக போகிறார் என்று கூறியதில் இருந்து அவரது கடைசி படத்தை வெற்றிமாறன் இயக்க உள்ளதாகவும் அந்த திரைப்படத்தின் பெயர் "கருடா" என்றும் அதிகாரபூர்வமற்ற தகவல்கள் பரவி வந்ததும் குறிப்பிடத்தக்கது.



இந்த நிலையிலேயே பைக் என்றாலே அஜித்தான் என்ற  அஜித் ரசிகர்களுக்கு சவால் விடும் விதமாக வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது பைக் ரெயிடு செய்து வெற்றி மாறனை சந்திக்க வந்த ரசிகர்கள் அவருடன் புகை படம் எடுத்துக்கொண்டனர். அவ்வாறு ட்ரெய்டர்களுக்கு அசுரன் திரைப்படத்தின் வெற்றிக்காக தயாரிப்பாளர் பரிசளித்த BMW பைக்கை ஓட்டி காட்டியுள்ளார் வெற்றிமாறன். குறித்த காணொளிகள் வைரலாகி வருகின்றது. 

Advertisement

Advertisement