• Jul 30 2025

அப்துல் கலாமாக தனுஷ்..! – சர்வதேச படத்தில் களமிறங்கும் மாஸ் ஹீரோ..!

subiththira / 2 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பல கதாப்பாத்திரங்களில் நடித்து மக்கள் மனங்களைக் கொள்ளை கொண்ட நடிகராக தனுஷ் விளங்குகின்றார். 90 படங்களுக்கு மேல் நடித்துள்ள இவர் தனது தரத்தை மீண்டும் ஒருமுறை நிரூபிக்கவுள்ளதாக தற்பொழுது தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில், இந்தியாவின் மிகப்பெரிய அறிவியல் ஆளுமையாக விளங்கிய அப்துல் கலாம் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்ட சர்வதேச படத்தில் தனுஷ் ஹீரோவாக நடிக்கவுள்ளதாக தற்பொழுது அறிவிக்கப்பட்டுள்ளது.


தனுஷ் சமீபத்தில்  சேகர் கம்முலா உருவாகியுள்ள "குபேரா" என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இதைத் தொடர்ந்து, இட்லி கடை, தேரே இஷ்க் மெயின் போன்ற படைப்புக்களிலும் நடித்து வருகின்றார். 

அத்தகைய நடிகர் தற்பொழுது, விக்னேஷ் ராஜா, மாரி செல்வராஜ் மற்றும் வெற்றிமாறன் ஆகியோரின் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக தமிழ் சினிமாவில் பேசப்பட்டு வருகின்றது. சமீபத்தில் வெளியான தகவலின்படி, தனுஷ் உலகம் முழுவதும் பேசப்படும் அப்துல் கலாமின் கதாப்பாத்திரத்தில் நடிக்கப்போவதாக சிலர் கூறியுள்ளனர்.


இந்த பயோபிக் திரைப்படம், அப்துல் கலாம் எழுதிய ‘அக்னி சிறகுகள்’ (Wings of Fire) என்ற சுயசரிதையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்படுகிறது. இந்திய விஞ்ஞான வளர்ச்சிக்காக அப்துல் கலாம்  செய்த தியாகங்களை மையமாகக் கொண்டு இப்படம் உருவாகும் எனச் சிலர் கருதுகின்றனர்.

இந்த புரொஜெக்ட்டை ஓம் ராவத் என்பவர் இயக்கவிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஓம் ராவத், “இந்தப் படத்தை ஒரு பயோபிக் அல்ல… ஒரு ‘இந்திய வீரனின் நிஜப் பயணம்’ என்று பார்க்கவேண்டும். கலாம் அவர்கள் ஒரு மனிதராக மட்டும் அல்ல, ஒரு உணர்வாக இருக்கிறார். அந்த உணர்வை காட்சிப்படுத்த தனுஷ் சரியான தேர்வாக இருக்கிறார்.” எனத் தெரிவித்துள்ளார்.

அத்துடன், ‘கலாம்: மிஸைல் மேன் ஆஃப் இந்தியா’ திரைப்படம், 2025ம் ஆண்டுக்கான கேன்ஸ் திரைப்பட விழாவில் சிறப்பு காட்சியாக திரையிடப்படும் என்று திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இத்தகவல் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Advertisement