• Sep 21 2023

உதவி இயக்குநரின் Reception இல் கலந்து கொண்டு... சர்ப்பிரைஸ் கொடுத்த தனுஷ்... வைரலாகும் புகைப்படங்கள்..!

Prema / 2 days ago

Advertisement

Listen News!

இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள திரைப்படம் 'கேப்டன் மில்லர்'. இப்படம் விரைவில் ரிலீஸாகவுள்ளது. இப்படம் குறித்த அப்டேட்டுக்களும் அடிக்கடி வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது. 


அதுமட்டுமல்லாது தனுஷ் புதிய படம் ஒன்றினையும் இயக்கி வருகிறார். இதனை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றது. மேலும் இப்படத்தில் காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், எஸ்.ஜே.சூர்யா, சந்தீப் கிஷான் எனப் பலரும் நடிக்கின்றனர்.


இந்நிலையில் இப்படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றி வந்த ஆனந்த் என்பவருக்கு சமீபத்தில் திருமணம் நடைபெற்றது. படங்களில் பிசியாக இருந்தமையினால் திருமண நிகழ்விற்குச் செல்லாத தனுஷ் தற்போது ஆனந்தின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சர்ப்பிரைஸ் கொடுத்துள்ளார். இதுகுறித்த புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன.


Advertisement

Advertisement

Advertisement